/indian-express-tamil/media/media_files/2025/10/22/chembarambakkam-2025-10-22-08-36-53.jpg)
பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து உபரிநீர் திறப்பு... பருவமழை உச்சத்தை நெருங்குவதால் முன்னெச்சரிக்கை
பருவமழை தீவிரமடைவதற்கு முன்னதாக, சென்னையின் முக்கிய நீராதாரங்களை தயார்படுத்தும் வெள்ளத் தடுப்பு நடவடிக்கையாக பூண்டி, செம்பரம்பாக்கம், ரெட் ஹில்ஸ் (புழல்) ஆகிய 3 முக்கிய நீர்த்தேக்கங்கள் மற்றும் தென் சென்னையில் உள்ள கீழ்க்கட்டளை, நாராயணபுரம் ஏரிகளிலிருந்து செவ்வாய்க்கிழமை உபரி நீர் திறக்கப்பட்டது.
நீர்த்தேக்கங்களில் நீர் திறப்பு விவரம்:
பூண்டி ஏரியில் 2,387 கனஅடி வீதமும், புழல் ஏரியில் 500 கனஅடி வீதமும், செம்பரம்பாக்கம் ஏரியில் 100 கனஅடி வீதமும் உபரி நீர் திறக்கப்பட்டது. நீர்வளத் துறை அதிகாரிகள் கடந்த வியாழக்கிழமை முதலே பூண்டி ஏரியில் இருந்து உபரி நீரை 2,287 கன அடி வீதம் வெளியேற்றி வருகின்றனர். செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, பூண்டி ஏரியின் நீர் இருப்பு 2,521 மில்லியன் கனஅடியாக இருந்தது.
புழல் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர், 13.5 கி.மீ நீளமுள்ள உபரி கால்வாய் வழியாக மணலியில் உள்ள கொசஸ்தலையாறு ஆற்றில் கலக்கிறது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, இந்த ஏரியின் முழு கொள்ளளவு 3,300 மில்லியன் கனஅடியில் நீர் இருப்பு 2,732 மில்லியன் கன அடி இருந்தது.
தென் சென்னை ஏரிகளில் உபரி நீர் திறப்பு:
தென் சென்னையில் உள்ள நாராயணபுரம் மற்றும் கீழ்க்கட்டளை ஏரிகளில் இருந்து மொத்தம் 3,420 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. ரேடியல் சாலை (Radial Road), ஓ.எம்.ஆர் (OMR) பகுதிகளில் வெள்ளத்தைக் குறைக்கும் நோக்குடன் நீர்வளத் துறை இந்த ஏரிகளில் இருந்து நீரைத் திறந்து உள்ளது. இந்த ஏரிகளில் இருந்து வெளியேற்றப்படும் நீர், ரேடியல் சாலை வழியாக பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அடைகிறது. அங்கிருந்து ஓக்கியம் மடுவு, பக்கிங்காம் கால்வாய் வழியாகச் சென்று இறுதியில் கோவளம் கழிமுகத்தில் கலக்கிறது.
தென் சென்னை ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவோ அல்லது ஆகாயத்தாமரை செடிகளை நீர்வளத் துறை முழுமையாக நீக்கவோ இல்லை என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். கீழ்க்கட்டளை மற்றும் நாராயணபுரம் ஏரி தென் பக்கத்தில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. இயற்கையான நீர்வழித்தடங்கள் சீரமைக்கப்படாவிட்டால், செம்பாக்கம், சேலையூர் மற்றும் நன்மங்கலம் போன்ற தாழ்வான பகுதிகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us