சென்னையில் உள்ள அம்மா உணவகங்கள் மூடப்படாது என்று மாநகராட்சி கூட்டத்தில் மேயர் பிரியா உறுதியளித்திருக்கிறார்.
ஏழை எளிய மக்கள் பயன்படுத்தக்கூடிய முக்கியமான உணவகங்களில் அம்மா உணவகம் நடத்தப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 400க்கும் மேற்பட்ட அம்மா உணவகங்கள் சென்னை மாநகராட்சியால் வார்டு வாரியாக செயல்பட்டு வருகிறது.
சென்னை மாநகராட்சி கூட்டம் இன்று மேயர் பிரியா தலைமையில் துவங்கியது. இதில் கேள்வி நேரத்தின்போது, அம்மா உணவகத்தை பொறுத்தவரை இதுவரை ரூ.786 கோடி நஷ்டத்தில் இயங்குவதாகவும், ஒரு நாளுக்கு ரூ.500க்கும் கீழ் வருமானம் வரும் அம்மா உணவகங்களை உடனடியாக மூட வேண்டும் என்று கணக்கு குழு தலைவர் தனசேகரன் கூறுகிறார்.
அதற்கு பதிலளித்த மேயர் பிரியா ராஜன், " அம்மா உணவகங்கள் எப்போது போல செயல்படும். ஏதேனும் குறிப்பிட்ட பிரச்சனை இருந்தால், அது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், அம்மா உணவகங்களில் உறுப்பினர் பரிந்துரைத்தவர்களை பணியில் சேர்க்க அனுமதி வழங்கப்படும்", என்று கூறினார்.
ஆகையால் ஏற்கனவே செயல்பட்டுக்கொண்டிருந்த அம்மா உணவகங்கள் எப்போது போலும் செயல்படும் என்றும், வருமானம் குறைவாக இருக்கக்கூடிய அம்மா உணவகங்களை மூடுவதற்கு ஆய்வு செய்யப்படும் என்றும் மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil