உயிர் பிழைத்தது எப்படி? .. குரங்கணி காட்டுத்தீயில் இருந்து தப்பித்த பெண்களின் திகில் அனுபவம்!

தேனி மாவட்டம் குரங்கணி காட்டுத் தீ விபத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த பெண்கள் சிலர், உயிர் பிழைத்த திகிலான அனுபவங்களை பகிர்ந்துள்ளனர்....

தேனி மாவட்டம் குரங்கணி காட்டுத் தீ விபத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த பெண்கள் சிலர்,   உயிர் பிழைத்த திகிலான அனுபவங்களை பகிர்ந்துள்ளனர்.

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் அருகே உள்ள குரங்கணி மலைப்பகுதியில் நேற்று முன்தினம் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி சென்னை  சேர்ந்தவர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். இதில், பலர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில், இரவு காட்டுத்தீயில் மாட்டுக் கொண்ட போது என்னவெல்லாம் நடந்தது என்பதை  செய்தியாளர்களிடம் பெண்கள் சில விவரித்தனர்.

சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்தவர் மோனிஷா.  இவர், கடந்த 9ம் தேதி சென்னையில் உள்ள  டிரக்கிங் கிளப் மூலம் தேனி குரங்கணி மலைப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது இவர் சென்ற குழுவில் இருந்த ஒருவர், காட்டுத்தீ பரவி வருவதாகவும், எந்த நேரத்திலும் நாம் இருக்கும் பகுதிக்கு அது வந்து விடலாம் எனவே, எல்லோரும் உடனடியாக இந்த  பகுதியை  விட்டு வெளியேற வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.

அதன் பின்பு, மோனிஷாவுடன் சுமார் 15 பேர், அங்கிருந்து வேகமாக ஓட ஆரம்பித்துள்ளனர். அவர்களை விடாமல் காட்டுத் தீ துரத்தியதால் மோனிஷா தனது நண்பர்கள் மூவருடன் சேர்ந்து பள்ளத்தில் குதித்துள்ளார். அதன் பின்பு  பாறையின் கீழ் கை, கால்களை மடக்கிய படி, அமர்ந்துக் கொண்டு சுமார் 2 மணி நேரம் போராடியுள்ளார்.

பின்பு, கிராம மக்கள் மற்றும் வனத்துறையினர், மீட்டுக் குழு உதவியுடன் மோனிஷா மற்றும் அவரின் நண்பர்களை பத்திரமாக மீட்டுள்ளனர்.

கடந்த வெள்ளிகிழமை சென்னையில் இருந்து 27 பேர் கொண்ட குழுவினருடன், சஹானாவும் சேர்ந்து, தேனி  குரங்கணி பகுதிக்கு மலையேற்ற பயிற்சிக்கு சென்றார்.   சஹானாவும் காட்டுத் தீயுடன்  போராடி தனது உயிரை காப்பாற்றிக் கொண்டுள்ளார்.

மதிய உணவிற்காக சஹானா தனது குழுவினருடன் மதியம் 2 மணிக்கு இணைந்துள்ளார். .அப்போது அந்த பகுதியில் திடீரென காட்டு தீ பரவியுள்ளது. இதனால், என்ன செய்வது என தெரியாமல் அவர், 5 பேருடன் சேர்ந்து  ஓடியுள்ளார். பின்பு, தீயின் வேகம் அதிகமானதால்,   மலையடிவாரத்தில் இருந்து  குதித்து தனது உயிரை காப்பாற்றிக்  கொண்டுள்ளார். மாலை 6 மணிக்கு மேல் கிராம மக்களும், வனத்துறையினரும் அவரை பத்திரமான மீட்டுளனர்.

 

 

×Close
×Close