பழங்குடி இருளர் மாணவர்களின் கல்வி நலனுக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கிய சூர்யா

ஜெய் பீம் படத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிரத்யேகமாக திரையிட்டுக் காட்டிய படக்குழுவுக்கு, முதல்வர் தனது வாழ்த்தினை தெரிவித்தார்.

த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோ மோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல திரை பிரபலங்களின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜெய் பீம்’.

நாளை அமேசான் ப்ரைம் OTT தளத்தில் வெளியாகவுள்ள இந்த படத்தில், பழங்குடி இருளர் இன மக்கள் தங்கள் வாழ்வில் சந்திக்கும் பிரச்சினை குறித்து எடுத்தரைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ட்ரெய்லருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் பிரத்யேகக் காட்சிகள் திரையிடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்தப் படத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிரத்யேகமாக திரையிட்டுக் காட்டிய படக்குழுவுக்கு, முதல்வர் தனது வாழ்த்தினை தெரிவித்தார்.

மேலும், தமிழக முதல்வர் முன்னிலையில் இருளர் மாணவர்களின் கல்வி நலனுக்காக, தனது தயாரிப்பு நிறுவனம் சார்பில் 1 கோடி ரூபாய் நிதியுதவி நடிகர் சூர்யா வழங்கினார்.

இந்த நிகழ்வின்போது, முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின் உள்ளிட்டோர் உடனிருந்தனர். சூர்யா நிதியுதவி வழங்கிய புகைப்படம் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.பலரும் சூர்யாவின் முயற்சியை பாராட்டி வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Surya donate 1 crore ruppes for tribal students welfare

Next Story
தமிழக அரசின் இல்லம் தேடி கல்வித் திட்டம் சந்திக்க உள்ள சவால்கள்!Illam Thedi Kalvi scheme, Illam Thedi Kalvi scheme will face challenges, tamilnadu School Education department, தமிழக அரசின் இல்லம் தேடி கல்வித் திட்டம், இல்லம் தேடி கல்வித் திட்டம் சந்திக்க உள்ள சவால்கள், tamil nadu, school education, illam thedi kalvi
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com