scorecardresearch

நிஜமான ஆபத்தா, தற்காப்பு ஆட்டமா? ட்விட்டரில் பற்ற வைத்த திருச்சி சிவா மகன்!

என்னை கைது செய்யப்போறாங்க; திமுக ஆட்சிக்கு எங்கள் தலைவர் முடிவு கட்டுவார் – திருச்சி சிவா மகன் சூர்யா ட்வீட்

Trichy DMK MP Sivas son surya says I am a devotee of Nityananda
திருச்சி திமுக எம்.பி.,யின் மகனும், பாஜக ஓபிசி அணியின் மாநில பொதுச் செயலாளருமானருமான சூர்யா

Surya Siva tweets I am going to be arrested in 24 hours creates stir: 24 மணி நேரத்தில் தான் கைது செய்யப்படலாம் என்றும், எதையும் சந்திக்க தயார் என்றும் பாஜகவில் இணைந்த திருச்சி சிவா மகன் சூர்யா ட்வீட் செய்துள்ளார்.

திமுக மூத்த தலைவர்களில் ஒருவரும், திமுகவின் மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவாவின் மகன் சூர்யா, சமீபத்தில் பாஜகவில் சேர்ந்தார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலை இணைந்த அவர், அதற்கான உறுப்பினர் அட்டையும் பெற்றுக் கொண்டார்.

பாஜகவில் இணைந்த பின்னர், திமுகவை குடும்ப கட்சி என்று சாடிய சூர்யா, ஒரு சில குடும்பங்களுக்கு உழைப்பதற்கு பதிலாக, பாஜகவில் இணைந்து மக்களுக்காக சேவை செய்யப்போகிறேன் என கூறினார்.

இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த சூர்யா சிவா, ஜி ஸ்கொயர் விவகாரம், சென்னை மற்றும் திருச்சியில் உள்ள காவேரி மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.

இந்தநிலையில், சூர்யா சிவா தனது ட்விட்டர் பக்கத்தில் தான் 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட உள்ளதாக பரபரப்பு தகவலை பகிர்ந்துள்ளார். சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், அடுத்த 24 மணி நேரத்தில் நான் கைது செய்யப்படுவேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இது நடக்கும் என்று எனக்கு நன்றாகத் தெரியும். டேவிட் ஆசிர்வாதம் (ஏடிஜிபி உளவுத்துறை) அவர்களுக்கு நன்றி. போலி வழக்குகளை உருவாக்குவது திமுகவுக்கு பெரிய விஷயமல்ல. எதையும் சந்திக்க கூடிய மன நிலையில் தான் நான் இருக்கிறேன் வாருங்கள் வருக.

இதையும் படியுங்கள்: அறிவாலயத்தில் கையூட்டு பெறுவதாக பேசுவதா? அண்ணாமலையை கண்டித்து ஊடகத் துறையினர் ஆர்ப்பாட்டம்

உங்கள் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன ஸ்டாலின். உங்கள் குடும்ப ஆட்சி மற்றும் திமுகவின் அத்தியாயத்தை மூட எங்கள் தலைவர் ஒரு வரலாற்று தேதியை கொடுப்பார், என பதிவிட்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Surya siva tweets i am going to be arrested in 24 hours creates stir