தமிழகத்தில் உள்ள பழமையான சைவ மடங்களில் ஒன்றான தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், திருவிடைமருதூர் அருகே உள்ள சூரியனார் கோயில் நவக்கிரங்களில் ஒன்றான பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது.
இந்த ஆதீனத்தின் 28வது மடாதிபதியாக மகாலிங்க சுவாமிகள் இருக்கிறார். இந்நிலையில் மகாலிங்க சுவாமி கர்நாடகாவில் ஹேமாஸ்ரீ என்ற பெண்ணை பதிவு திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இவரை ஏராளமான பக்தர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். அடிக்கடி ஆதீனத்துக்கு வந்து மகாலிங்க சுவாமியிடம் பக்தர்கள் ஆசி பெற்று செல்கின்றனர்.
இந்நிலையில் தான் பெண் பக்தையை சூரியனார் கோவில் ஆதீன மடாபதிபதி மகாலிங்க சுவாமி திருமணம் செய்துள்ளார். ஹேமா ஸ்ரீ என்ற பெண் பக்தை அடிக்கடி மடாதிபதி மகாலிங்க சுவாமியை சந்தித்து ஆசி வாங்கியுள்ளார். இந்த பழக்கம் இருவருக்கும் நெருக்கத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் நிலையில் இருவரும் திருமணம் செய்துள்ளனர்.
இதையடுத்து மகாலிங்க சுவாமி - ஹேமா ஸ்ரீ ஆகியோர் பெங்களூர் சென்று அங்கு வைத்து பதிவு திருமணம் செய்துள்ளனர். இவர்களின் பதிவு திருமணம் என்பது அக்டோபர் மாதம் 10ம் தேதி நடந்துள்ளது.
இந்நிலையில் திருமணம் செய்து கொண்டது தொடர்பாக மகாலிங்க சுவாமி விளக்கம் அளித்துள்ளார். அதில், ‘திருமணம் ஆனவர்களும் ஆதீன மடாதிபதியாக இருந்துள்ளனர். எனவே நான் யாரிடமும் எதையும் மறைக்க விரும்பவில்லை. நான் திருமணம் செய்து கொண்ட ஹேமா ஸ்ரீ, மடத்துக்கு பக்தராக வந்து சென்றவர் ஆவார். இனியும் அவர் மடத்திற்குப் பக்தராக மட்டுமே வந்து செல்வார்’ எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், கர்நாடகா மாநிலத்தில் சைவ மடம் அமைக்க ஹேமா ஸ்ரீ இடம் அளித்ததாகவும் அவரை அந்த மடத்தின் செயலாளராக நியமித்திருப்பதாகவும், பதிவு திருமணம் செய்திருப்பதாகவும் தெரிவித்தார். தமிழகத்தில் ஒரு சில ஆதீனங்கள் திருமணம் செய்து கொண்டு ஆதீன கர்த்தர்களாக இருப்பதாகவும் சூரியனார் கோவில் ஆதீனம் தெரிவித்தார். சூரியனார் கோவில் ஆதினம் மடாதிபதியாக தான் நீடிப்பதாகவும். கர்நாடக மாநிலத்தில் சைவ மடத்தின் செயலாளராக தனது மனைவி இருப்பார் எனவும் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“