Toll Gate | தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 34 சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் அதிகரித்து வரும் வாகனப் பயனீட்டாளர் கட்டணத்தை ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நிறுத்தி வைக்குமாறு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) சுங்கச்சாவடி ஆபரேட்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
ஏப்ரல் 1ம் தேதி நள்ளிரவு முதல் அமல்படுத்தப்பட இருந்த கட்டணத் திருத்தம், ஞாயிற்றுக்கிழமை புது டெல்லியில் உள்ள NHAI தலைவர் அலுவலகத்தின் உத்தரவைத் தொடர்ந்து கடைசி நிமிடத்தில் நிறுத்தப்பட்டது.
2020 கோவிட்-19 தாக்குதலின்போது டிரக்கர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பிறரிடமிருந்து பெரும் கோரிக்கை இருந்தபோதிலும், "சலுகை ஒப்பந்தத்தின்" படி கட்டண திருத்தத்தை நிறுத்துவதற்கான சட்ட விதிகள் இல்லாததைக் காரணம் காட்டி வருடாந்திர கட்டண உயர்வை ஒத்திவைக்க என்.ஹெச்.ஏ.ஐ (NHAI) மறுத்துவிட்டது.
இருப்பினும், வரவிருக்கும் பொதுத் தேர்தலுடன், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் என்.ஹெச்.ஏ.ஐ, வருடாந்திர திருத்தத்தை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளது.
விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், மதுரை, காரைக்குடி மற்றும் பிற பிரிவுகளில் உள்ள NHAI திட்ட இயக்குநர்கள் பெற்ற உத்தரவுகள் இந்த முடிவிற்கான காரணங்களை விளக்கவில்லை. இருப்பினும், ஓரிரு நாட்களில் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், “FASTag கட்டண முறைக்கு தொழில்நுட்ப மேம்படுத்தல்கள் செய்யப்படுவதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால்தான் கட்டணத் திருத்தம் இன்னும் செயல்படுத்தப்படவில்லை. இருப்பினும், விரிவான உத்தரவுக்காக நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம்" என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“