பன்வாரிலால் புரோஹித் தமிழக ஆளுநராக பணியாற்றிய போது பெண் பத்திரிகையாளர் ஒருவர் அவமதிக்கப்பட்டது தொடர்பாக ஆளுநர் அவர் வருத்தம் தெரிவித்திருந்தார். அந்த சமயத்தில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக சமூக வலைதளங்களில் ஒருவர் வெளியிட்ட பதிவை பாஜக-வை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருதார். அவரின் அந்த செயல் சமூக வலைதளம் மட்டுமின்றி பொதுவெளியிலும் பயங்கர அதிருப்தியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.
சென்னை மத்தியக் குற்றப்பிரிவு காவல் துறையினர், எஸ்.வி. சேகர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, சமூக வலைதளத்தில் பதிவு செய்ததை நீக்கி மன்னிப்பு கேட்டு விட்டதாக எஸ்.வி.சேகர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் மேலும் ஒரு முறை மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாகவும் கூறப்பட்டது.
அப்போது விசாரணைக்கு நேரில் ஆஜராகவில்லை எஸ்.வி. சேகர். தற்போது மீண்டும் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் அமெரிக்காவில் இருந்து யாரோ ஒருவர் அனுப்பிய கருத்தை படிக்காமல் பகிர்ந்துவிட்டேன். தனது தவறுக்கு மன்னிப்பு கேட்பதில் வெட்கப்படவில்லை எனக் கூறி, நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாகவும் எஸ்.வி.சேகர் தரப்பில் மனுத்தாக்கல் செய்தார். தேவைப்படும் போதெல்லாம் விசாரணைக்கு நேரில் ஆஜராவேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
4 புகார்கள் மீதான வழக்குகளிலும் தனித்தனி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 18-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. .
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil