இரண்டாவது முறையாக வீடியோ மூலம் மன்னிப்பு கோரும் எஸ்.வி.சேகர்!

எஸ்.வி.சேகர் இன்று வீடியோ மூலம் மன்னிப்புக் கோரியுள்ளார்

நடிகரும், பாஜகவைச் சேர்ந்தவருமான எஸ்.வி,சேகர் பெண் செய்தியாளர்கள் குறித்து தரம் தாழ்ந்த கருத்தை பதிவிட்டு இருந்தார். இதற்கு பத்திரிக்கையாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, எஸ்.வி.சேகர் நேற்று அறிக்கை மூலம் மன்னிப்பு கோரி இருந்தார்.

இருப்பினும், தொடர்ந்து அவருக்கு எதிர்ப்புகள் வலுத்துக் கொண்டே உள்ளன. அதன் பிரதிபலிப்பாக, நேற்றைய தினம் அவருடைய வீட்டின் மீது கல் வீசித் தாக்கப்பட்டது. இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், எஸ்.வி.சேகர் மீது புகார் அளித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இந்த நிலையில், எஸ்.வி.சேகர் இன்று வீடியோ மூலம் மன்னிப்புக் கோரியுள்ளார். அந்த வீடியோவில் மீண்டும் அவர், தான் தவறுதலாக அந்த செய்தியை ஷேர் செய்துவிட்டதாக கூறியுள்ளார்.

மேலும், இப்படி விமர்சனம் செய்து அரசியல் செய்ய வேண்டிய சூழ்நிலையில் நான் இல்லை. ஆகவே, அந்தப் பதிவை படித்துப் பார்க்காமல் பகிர்ந்தது தான் நான் செய்த தவறு. இதற்காக நான் வருத்தம் தெரிவிக்கவில்லை. மன்னிப்புக் கேட்டிருக்கிறேன் என்று பேசியுள்ளார்.

×Close
×Close