தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் கு. அண்ணாமலை பேட்டியொன்றில், “திராவிட கும்பல் பிராமண துவேசத்தை வெறுப்பை கடைப்பிடித்து வருகிறது. பிராமணர்களுக்கு எதிராக நேரடி தாக்குதல் நடைபெறுகிறது” எனப் பேட்டி ஒன்றில் பேசியிருந்தார்.
Advertisment
இதற்குப் பதில் அளிக்கும் வகையில் பேசிய நகைச்சுவை நடிகரும், முன்னாள் பாஜக நிர்வாகியுமான எஸ்.வி. சேகர், “இப்போதாவது புத்தி வந்ததே? எல்லாம் மேலிடத்தில் இருந்து கொடுக்கப்பட்ட அழுத்தம்” எனத் தெரிவித்திருந்தார்.
பாஜகவின் முன்னாள் நிர்வாகி எஸ்.வி. சேகர்
இது தொடர்பான கேள்விக்கு காட்டமாக பதில் அளித்த அண்ணாமலை, அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. அவரை வேண்டும் என்றால் மேலிடத்தில் பேசி என்னை தூக்கச் சொல்லுங்கள்” என்றார். இதற்கு முன்னதாகவும் எஸ்.வி சேகர் அண்ணாமலையை வம்பிழுத்து வருகிறார். அண்ணாமலை பிராமண வெறுப்பு கொண்டவர் என ஒருமுறை பேட்டி ஒன்றில் கூறினார்.
Advertisment
Advertisements
தொடர்ந்து ட்விட்டரில் ஆயிரம் ரூபாய் காசு என்றாலும் உழைத்து சாப்பிடுபவனே மனிதன் எனப் பேசினார். மேலும் அண்ணாமலை பிராமணர்களை தேடிதேடி வேட்டையாடுகிறார். இந்தப் பட்டியல் நீளமானது” எனத் தெரிவித்துள்ளார். எஸ்வி சேகர், அண்ணாமலை மோதல் தமிழக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“