scorecardresearch

எஸ்.வி. சேகரை கைது செய்ய இடைக்கால தடை!

பெண் செய்தியாளர்களை அவதூறாக பேசிய வழக்கில் முன் ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.  இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று (22.5.18)நடைபெற்றது. தேடப்படும் குற்றவாளியான  எஸ்.வி சேகர் பெண் பத்திரிக்கையாளர் குறித்து  இழிவாக  பேசி தனது முகநூல் பக்கத்தில் கருத்து ஒன்றை  பதிவிட்டிருந்தார்.  இந்த பதிவிற்கு கடுமையான எதிர்ப்பு பத்திரிக்கையாளர்கள் இடமிருந்து கிளம்பியது.   இது தொடர்பாக பெண் பத்திரிகையாளர்கள் உள்பட பலரும் போலீஸில் புகார் கொடுத்தனர். இந்த வழக்கில், எஸ்.வி.சேகர் முன் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த […]

எஸ்.வி. சேகரை கைது செய்ய இடைக்கால தடை!
பெண் செய்தியாளர்களை அவதூறாக பேசிய வழக்கில் முன் ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.  இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று (22.5.18)நடைபெற்றது.

தேடப்படும் குற்றவாளியான  எஸ்.வி சேகர் பெண் பத்திரிக்கையாளர் குறித்து  இழிவாக  பேசி தனது முகநூல் பக்கத்தில் கருத்து ஒன்றை  பதிவிட்டிருந்தார்.  இந்த பதிவிற்கு கடுமையான எதிர்ப்பு பத்திரிக்கையாளர்கள் இடமிருந்து கிளம்பியது.   இது தொடர்பாக பெண் பத்திரிகையாளர்கள் உள்பட பலரும் போலீஸில் புகார் கொடுத்தனர்.

இந்த வழக்கில், எஸ்.வி.சேகர் முன் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், எஸ்.வி.சேகரின் முகநூல் பதிவு தொடர்பாக கடுமையான கருத்துகளையும் கூறியது. ஆனாலும் தமிழ்நாடு போலீஸார் இதுவரை எஸ்.வி.சேகரை கைது செய்யவில்லை.

மேலும்,  சமீபத்தில் நடந்த பொது நிகழ்ச்சியில் ஒன்றில், பாஜகவுடன்   எஸ். வி சேகரும் கலந்துக் கொண்டிருந்தார். ஆனால், அப்போதும் போலீசார் அவரை கண்டும் காணாமல் இருந்தது. இந்நிலையில் தான்,  கரூர் ஜே.எம்-2 நீதிமன்றத்திலும் எஸ்.வி.சேகர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு தாக்கல்செய்யப்பட்டது. தமிழ் ராஜேந்திரன் என்ற வழக்கறிஞர்  இந்த வழக்கைத் தொடர்ந்தார்.

எஸ்.வி.சேகர் மீதான இந்த வழக்கு விசாரணையில் வரும் ஜூலை 5-ம் தேதி, எஸ்.வி.சேகர் கரூர் கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், முன் ஜாமீன் கோரி எஸ் வி சேகர், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். உச்சநீதிமன்ற விடுமுறைக்கால அமர்வில் எஸ்.வி.சேகரின்  முன்ஜாமின் மனு இன்று  விசாரணைக்கு வந்தது.

அப்போது, எஸ்.வி.சேகரை கைது செய்ய ஜூன் 1-ம் தேதி வரை உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

 

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Sve shekars anticipatory bail petition