மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல் அமைச்சருமான கருணாநிதியின் பிறந்த நாள் ஜூன் 3ஆம் தேதி வருகிறது.
இந்தத் தினத்தில் ஒவ்வொரு பள்ளிக் கூடங்கள் மற்றும் சத்துணவு கூடங்களில் பள்ளிக் குழந்தைகளுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.
கருணாநிதி பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை ஆடம்பரமாக வெகு விமரிசையாக கொண்டாட மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
இந்த நிலையில் அவருக்கு மெரினா கடற்கரையோரம் பேனா நினைவு சிலை அமைக்கவும் ஏற்பாடுகளை செய்துவருகிறது.
இதற்கிடையில் 500 மதுக் கடைகளை மூடவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“