ஆன்லைன் ஸ்விக்கி செயலி மூலம் நூடுல்ஸ் ஆர்டர் செய்த இளைஞர் ஒருவருக்கு அதில் கரைப் படிந்த பேண்ட் எய்டு இருந்தது அதிர்ச்சி அளித்துள்ளது.
பசி எடுத்தால் ஓட்டலுக்கு சென்று சாப்பிடும் கலாச்சாரம் மாறி, நாம் இருக்கும் இடத்திற்கு விருப்பப்பட்ட ஓட்டலில் இருந்து சாப்பாடும் வரும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிலும் அவசர அவசரமாக ஓடும் வாழ்க்கையில் சமையல் செய்வதற்கு கூட நேரமின்றி பலரும் வெளியே வாங்கி சாப்பிடும் வழக்கத்திற்கு மாரியுள்ளனர்.
அவர்களின் தேவையை சேவையாக மாற்றி போட்டிப் போட்டு களத்தில் குதித்தது ஆன்லைன் உணவு நிறுவனங்கள். கையில் ஒரு ஸ்மார்ட் போன் மற்றும் பணம் இருந்தால் போதும். உட்கார்ந்திருக்கும் இடத்திற்கு உணவு வரும். அப்படி செயலி மூலம் ஆர்டர் செய்து சாப்பிடும் நிறுவனங்களில் ஒன்று தான் ஸ்விக்கி.
ஸ்விக்கி ஆர்டரின் ரத்தம் படிந்த பேண்ட் எயிட்
இவ்வாறு ஸ்விக்கியின் மூலம் ஓட்டல் ஒன்றி நூடுல்ஸ் ஆர்டர் செய்த பாலமுருகன் தீனதயாளன் என்ற இளைஞருக்கு காத்திருந்தது அதிர்ச்சி. ஓட்டலில் இருந்து வந்த பேக்கெட்டில், பாதி நூடுல்ஸ் சாப்பிடும்போதே, இரத்த கரைப் படிந்த பேண்டு எய்டு ஒன்று இருந்தது.
இதை பார்த்த உடனே அந்த இளைஞர் அதிர்ச்சியானார். ஏற்கனவே பாதி உணவு சாப்பிட்டு முடித்த பின்னர் பாதியில் பேண்டு எய்டு பார்த்து கோவமடைந்த அவர், உடனே அந்த ஓட்டலை தொடர்ப்பு கொண்டு பேசினார். அப்போது அவருக்கு வேறு ஒரு உணவு கொடுத்து அனுப்புவதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால் அதில் விருப்பமில்லாத பாலமுருகன், ஸ்விக்கியையும் தொடர்பு கொண்டார். உணவு நம் கைக்கு வந்த பிறகு ஸ்விக்கிக்கு போன் போடும் வசதி இல்லாத காரணத்தால் மெசேஜ் அனுப்பியிருக்கிறார். ஆனால் அவர்கள் தரப்பில் இருந்து எந்த பதிலும் வராமல் போனதால் பாலமுருகனுக்கு ஸ்விக்கியின் சேவை ஏமாற்றம் அளித்தது.
/tamil-ie/media/media_files/uploads/2019/02/swiggy.png)
இது குறித்து முகநூலில் பாலமுருகண் பதிவிட்டிருப்பது வேகமாக பரவி வருகிறது. சமீபக் காலமாகவே ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து சாப்பிடுபவர்கள் இது போன்ற புகார்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாலமுருகணின் புகாரும் அந்த பட்டியலில் இணைந்துள்ளது.