scorecardresearch

ப்ளூ காய்ச்சல்: பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க ஓ.பி.எஸ்., ஜி.கே. வாசன் கோரிக்கை

மாணாக்கர்களுக்கு கற்றல் தடைப்படாமல் இருக்க ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்த அரசு வழிவகை செய்ய வேண்டும் என ஜி.கே. வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Swine flu cases in Tamil Nadu
தமிழகத்தில் ப்ளூ காய்ச்சல் குழந்தைகள் மத்தியில் வேகமாக பரவிவருகிறது.

தமிழ்நாட்டில் ப்ளூ காய்ச்சல் பரவல் காணப்படுவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் (ஓ.பி.எஸ்), மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் எம்.பி., ஜி.கே. வாசன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து ஓ.பன்னீர் செல்வம் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது.

பள்ளிக்கு செல்லும் கட்டாயம்..

மறுபுறம் ப்ளூ காய்ச்சல் பாதிப்பும் உள்ளது. இந்தக் காய்ச்சல் குறிப்பாக குழந்தைகள் மத்தியில் வேகமாக பரவுகிறது. இதனால் குழந்தைகள் நல மருத்துவமனையில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

மேலும் புதுச்சேரியில் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் காய்ச்சல் அறிகுறிகள் காணப்பட்டால் மாணவர்கள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்று அநிவிக்கப்பட்டாலும், தேர்வு உள்ளிட்ட கட்டாயம் காரணமாக பள்ளிக்கு அனுப்பும் சூழல் உள்ளது.

ஆகவே பள்ளிகளுக்கு விடுமுறை அளிகக வேண்டும் எனக் கூறியுள்ளார். இந்த நிலையில், த.மா.கா. தலைவரும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

த.மா.கா தலைவர் கோரிக்கை

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “எச்1என்1 இன்ப்ளுயன்சா காய்ச்சல் குழந்தைகளுக்கு எளிதில் பரவுவதால் அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு குறிப்பிட்ட காலங்கள் வரை விடுமுறை அளிக்க வேண்டும்.

அவர்களுக்கு கற்றல் தடைப்படாமல் இருக்க ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்த அரசு வழிவகை செய்ய வேண்டும்.

10, 11, 12 ஆகிய வகுப்புகள் படிக்கும் மாணவர்களுக்கு அரசு தேர்வுகள் இருப்பதால் அவர்களுக்கு உரிய வழி காட்டுதலின் படியும், பாதுகாப்புடனும் வகுப்புகள் நடத்த முன்வர வேண்டும்.
மாணவ- மாணவிகளுக்கு காய்ச்சல் இருந்தால் உரிய மருத்துவ உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

மா. சுப்பிரமணியன் பதில்

இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிமணியன், “மாணவ- மாணவியரின் நலன் கருதி விடுமுறை அளிக்கும் எண்ணம் இல்லை.

காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் மாணவ- மாணவியர்கள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்” என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Swine flu fever ops and gk vasan request govt to give holidays to schools