scorecardresearch

காவலர்களின் பதவி உயர்வு குறித்து டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம்  

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கோவை மாநகரில் போத்தனூர், கவுண்டம்பாளையம், சுந்தராபுரம், கரும்புக்கடை ஆகிய 3 இடங்களில் புதிய காவல் நிலையங்களை திறந்து வைக்கிறார்.

டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம்  
டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம்  

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கோவை மாநகரில் போத்தனூர், கவுண்டம்பாளையம்,  சுந்தராபுரம், கரும்புக்கடை ஆகிய 3 இடங்களில் புதிய காவல் நிலையங்களை திறந்து வைக்கிறார்.

அதன் ஒரு பகுதியாக கோவை போத்தனூர் காவல் நிலைய வளாகத்திற்குள் புதிதாக கட்டப்பட்டுள்ள தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் புலனாய்வு பிரிவு காவல் நிலையத்தை திறந்து வைத்து பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து  அவர் கூறியதாவது. தமிழ்நாட்டில் 1352 காவல் நிலையங்கள் இருந்தது, அதில்  202 மகளிர் காவல் நிலையங்கள் மட்டும்  தான் இருந்தது. 

பிறகு முதலமைச்சர் அறிவுறுத்தலின் பேரில் காவல் நிலையங்கள் அதிகரிக்கப்பட்டு 1574 காவல் நிலையங்கள் தற்போது உள்ளது என்றார். தற்போது போத்தனூர் பகுதியில் திறக்கப்பட்ட இந்த காவல் நிலையத்தில் 8 காவலர்கள் பொறுபேற்க உள்ளனர் என்றார்.

கோவை மாநகரில் அக்டோபர் மாதம் நடைபெற்ற சம்பவத்தை அடுத்து கோவை மாநகர காவல்துறையை விரிவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் தற்போது காவல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. துடியலூர் மற்றும் வடவள்ளி காவல் நிலையங்கள்  தற்போது கோவை மாநகர காவல் துறையுடன் இணைய உள்ளது. இதன் காரணமாக கோவை மாநகரில் 15 காவல் நிலையங்கள் இருந்த நிலையில் 20 காவல் நிலையங்களாக அதிகரித்துள்ளது என தெரிவித்தார்.

இணையவழி குற்றங்களுக்கு 1930 எண்ணை உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும். இணைய வழி குற்றங்களை பொறுத்தவரை அதிக பணம் முதலீடு செய்யும் வரை காத்திருந்து அதிக பணம் சேர்க்க வேண்டுமென ஆசைக்காட்டி  பிறகு ஏமாற்றுவர். அவ்வாறுய் நீங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தால் உடனடியாக 1930 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்க வேண்டும். இக்குற்றங்களில் உள்ளூர் அல்லது இந்தியாவிற்குள்  உள்ள குற்றவாளிகளை எளிதாக பிடித்து விடும் நிலையில் வெளிநாடு குற்றவாளிகளை பிடிப்பது சிறிது சிரமமாக உள்ளது என்றார்.

காவல்துறை சார்பில் மக்களுக்காக காவல் உதவி என்ற ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம்  66 வகையான உதவிகளை பெற முடியும், ஆனால் இந்த செயலியை பலரும் பதிவிறக்கம் செய்யவில்லை. இது ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் செயலிகளாவும் உள்ளது. இது மிகவும் பயனுள்ள செயலியாக இருக்கும் என கூறினார்.

கரூர் மாவட்டத்தில் வருமானவரித்துறை சோதனையின் போது அதிகாரிகளின் வாகனங்கள் சேதப்படுத்தியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், அதற்கு கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விளக்கம் அளித்து விட்டார் என பதில் அளித்தார்.  மேலும் காவலர்களின் பதவி உயர்வு குறித்தான கேள்விக்கு 130 இன்ஸ்பெக்டர்களுக்கு ஓரிரு மாதங்களில் பதவி உயர்வு வழங்கப்படும் எனவும் அதனை தொடர்ந்து 1030 உதவி இன்ஸ்பெக்டர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

செய்தி : பி.ரஹ்மான், கோவை

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Syelandra babu press meet and information about police officers promotion