scorecardresearch

டெலிகிராம் மூலம் மோசடி; மக்களே உஷார்: டி.ஜி.பி., எச்சரிக்கை

டெலிகிராம் மூலம் மக்களிடம் பணம் முதலீடு என்று மோசடி செய்யும் கும்பல் உலவுகின்றன.

sylendra babu

தமிழ்நாட்டில் யாரும் டெலிகிராம் மோசடிக்கு ஆளாகிவிடக்கூடாது என்று டிஜிபி சைலேந்திர பாபு விழிப்புணர்வு வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.

டிஜிபி சைலேந்திரபாபு டுவிட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது: “மொபைல் போன் யூஸ் பண்றவங்களுக்கு ஒரு எச்சரிக்கை.. ஒரு லேட்டஸ்ட் மோசடி வந்து இருக்கு.. அதை டெலிகிராம் மோசடி என்று சொல்லலாம்.. வாட்ஸ் அப்பில் உங்களுக்கு ஒரு மெசேஜ் வரும்.

எப்படி மெசேஜ் என்றால், இந்த டெலிகிராம் குருப்பில் சேருங்க.. சேர்ந்து முதலீடு செய்தால் நிறைய நன்மைகள் கிடைக்கும் என்று சொல்லி சேரச்சொல்வார்கள்.

நீங்களும் அப்படி என்ன இருக்குன்னு ஆசைப்பட்டு டெலகிராமில் போய் சேர்ந்திடுவீங்க.. டெலகிராமில் நிறைய பேர் உரையாடிக் கொண்டிருப்பார்கள் , எப்படி என்றால், நான் வருமானம் இல்லாமல் இருந்தேன், வாழ்க்கையில் விரக்தி அடைந்து இருந்தேன், தற்கொலை பண்ணலாம்னு இருந்தேன். அப்பதான் சொன்னங்க..

ஒரு லட்சம் முதலீடு செய்தால் மாதம் 10 ஆயிரம் கிடைக்கும் என்று சொன்னார்கள், நானும் முதலீடு செய்தேன், இப்ப இரண்டு மூடின்று மாதங்களாக மாதம் மாதம் 10 ஆயிரம் கொடுக்குறாங்க.. நான் ஐந்து லட்சம் டெபாசிட் செய்தேன், இரண்டு வருடத்தில் 25 லட்சமாகிவிட்டது என்று கூறுவார்கள்..

நீங்களும் இதை நம்பி ஒரு லட்சமோ இரண்டு லட்சமோ டெபாசிட் பண்ணுவீங்க அதற்கு பிறகு நீங்க டெபாசிட் பண்ணுன உடனேயே , பணம் வந்து உங்கள் கணக்கில் வந்துவிட்டதாக அத்தாட்சி அனுப்புவாங்க.. உங்களுக்கு மாதம் மாதம் எவ்வளவு வட்டி வருதுன்னு அந்த அக்கவுண்டல காட்டிருவாங்க..

இந்த சூழ்நிலையில இன்னும் கொஞ்சம் முதலீடு செய்ய சொல்வாங்க.. நீங்களும் முதலீடு செய்வீங்க 25 லட்சம் ஆனவுடனேயே திருப்பி கொடுங்கன்னு கேட்பீங்க.. அவங்க 50 லட்சத்துலதான் கொடுப்போம் அப்படீன்னு சொல்வாங்க.. இன்னொரு 25 லட்சம் கட்டி 50 லட்சம் ஆயிடுச்சுன்னு சொல்வாங்க.. பணத்தை திருப்பிக் கொடுங்கன்னு நீங்க கேட்கும் போது உங்களுக்கு பணம் வராது, அவங்க டெலிகிராம் குரூப்பில் இருந்து உங்களை நீக்கி விடுவார்கள்.

நீங்க அப்புறம் எங்கதான் போனாலும் பணம் கிடைக்காது.. இது நவீன மோசடி, புதுசா வந்திருக்கு,, தமிழ்நாட்டில் எந்த நபருமே இந்த டெலிகிராம் மோசடிக்கு ஆளாகிவிடக்கூடாது. தமிழ்நாட்டில் இப்படி ஒரு மோசடி நடக்கக்கூடாது என்ன நல்ல எண்ணத்தில் தமிழ்நாடு காவல்துறை நாங்கள் முன்னெச்சரிக்கையாக, அட்வான்ஸ் ஆகத்தான் உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம். ரொம்ப கவனமாக இருங்க” இவ்வாறு டிஜிபி சைலேந்திர பாபு கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Sylendra babu awareness money scam through telegram app

Best of Express