பொதுமக்களின் மனுக்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்குள் நடவடிக்கை: புதிய டிஜிபி சைலேந்திரபாபு
Sylendra babu takes charge as new DGP of Tamil nadu: தமிழக காவல்துறைக்கு தலைமை தாங்க வாய்ப்பு அளித்தற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார் சைலேந்திர பாபு.
புதிய டிஜிபியாக பொறுப்பேற்ற சைலேந்திர பாபு, காவலர்கள் பொது மக்களிடம் மனிதாபிமான அடிப்படையில் நடந்துக்கொள்ள வேண்டும் என்றும் குற்றங்களை தடுப்பதில் எனது முழு கவனமும் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
Advertisment
புதன்கிழமை, இன்று தமிழ்நாட்டின் காவல்துறை இயக்குநராக பொறுப்பேற்ற சைலேந்திர பாபு, மனித உரிமைகளை மதிக்கவும், மக்களுடன் நல்லுறவைக் கையாளவும் காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பியாக இருந்த ஜே.கே.திரிபாதி இன்றுடன் ஓய்வு பெற உள்ள நிலையில் புதிய டி.ஜி.பி.யாக சைலேந்திர பாபு நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்டது. இதையடுத்து தமிழக காவல்துறையின் 30 ஆவது சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக சைலேந்திர பாபு இன்று பதவியேற்று கொண்டார். சென்னை மெரினாவில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்தில் பதவியேற்பு விழா நடந்தது.
சேவையில் இருந்து ஓய்வு பெற்ற ஜே.கே. திரிபாதியிடமிருந்து பொறுப்பேற்ற பின்னர், டாக்டர் சைலேந்திர பாபு, தமிழகத்தில் குற்றங்கள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பேணி காக்க முன்னுரிமை வழங்கப்படும். பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் குறித்து குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும். என்று கூறினார்.
காவல்துறையின் தலைமை பொறுப்பை வகிப்பது என்பது அரிய வாய்ப்பு என்றும் தமிழக காவல்துறைக்கு தலைமை தாங்க வாய்ப்பு அளித்தற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியும் தெரிவித்தார் சைலேந்திர பாபு.
மேலும், பொதுமக்களிடம் காவல்துறையினர் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அதற்கேற்ற வகையில், காவல் துறையினருக்கு பயிற்சிகள் வழங்கப்படும் என்றும் சைலேந்திரபாபு கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil