T M Krishna claims discrimination of arts during Modi-Xi summit: இந்தியா - சீனா முறைசாரா உச்சி மாநாட்டின் போது சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்காக ஏற்பாடு செய்யப்பட்ட கலாச்சார நிகழ்ச்சிகளில் “கலை மற்றும் அதன் அதை நிகழ்த்தியவர்களுக்கு இடையே பாகுபாடு இருந்தாக கர்நாடக இசை கலைஞர் டி.எம் கிருஷ்ணா சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.
இந்தியா-சீனா முறைசாரா உச்சி மாநாட்டின் போது சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்காக ஏற்பாடு செய்யப்பட்ட கலாச்சார நிகழ்ச்சிகளின்போது “கலை மற்றும் அதன் பயிற்சியாளர்களின் பாகுபாடு” இருப்பதாக கர்நாடக பாடகர் டி எம் கிருஷ்ணா சனிக்கிழமை கூறினார். கிளாசிக்கல் கலைஞர்களுக்கு "மரியாதைக்குரிய" அலங்கார அரங்க மேடை வழங்கப்பட்டது. அதே நேரத்தில் நாட்டுப்புற கலைஞர்கள் விமான நிலையங்களில் நிகழ்த்தினர். இது இந்திய கலாச்சாரத்தின் கொண்டாட்டம் அல்ல, மாறாக “சாதிவாதம்” என்று டி.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
“நான் நேற்று செய்திச் சேனல்களில் பார்த்ததிலிருந்து (மோடி, ஜி ஜின்பிங் சந்திப்பு) கலைகளுக்கு அதை நிகழ்த்துபவர்களுக்கும் இடையில் பாகுபாடு இருந்தது தெளிவாக காணப்பட்டது. கிளாசிக்கல் என்று அழைக்கப்படுபவர்களுக்கு மரியாதைக்குரிய அலங்கார அரங்க மேடை வழங்கப்பட்டபோது, நாட்டுப்புறக் கலைஞர்கள் விமான நிலையங்களில் நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள்.” என்று டி.எம்.கிருஷ்ணா டுவீட் செய்துள்ளார்.
ஜி ஜின்பிங் தங்கியிருந்த கிராண்ட் சோழா ஹோட்டல் நுழைவாயிலில் ஒரு பிளாட்ஃபார்மில் சுடும் வெயிலில் அவருக்காக உட்கார்ந்திருந்து காத்திருந்த நாதஸ்வரக் கலைஞரகளைப் பார்த்தேன். இது பல தசாப்தங்களாக நடந்துவருகிறது. இதை நாம் இந்திய கலாச்சாரத்தின் கொண்டாட்டம் என்று கூறுகிறோம். நாம் சாதியவாதத்தை கொண்டாடுகிறோம்”என்றும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் சிலர், ஜி ஜின்பிங் வருகையின்போது விமான நிலையத்திலும் பரதநாட்டியம் நிகழ்ச்சி நடைபெற்றது என்று கூறுகின்றனர். ஆனால், நான் கேட்ட குறிப்பிட்ட விஷயத்துக்கு யாரும் பதில் அளிக்கவில்லை என்றும் டி.எம்.கிருஷ்ணா குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியுடன் முறைசாரா உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜி ஜின்பிங் நேற்று மதியம் 2 மணி அளவில் சென்னை சர்வதேச விமான நிலையம் வந்த அவரை தமிழ் நடனக் கலைஞர்கள் மற்றும் இசைக் கலைஞர்கள் ஆரவார இசை நிகழ்சியுடன் வரவேற்றனர்.
சுமார் 500 தமிழ் நாட்டுப்புற கலைஞர்கள் ‘தப்பாட்டம்’ மற்றும் ‘பொய்க்கால் குதிரை’ உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நிகழ்த்தினர். அதே நேரத்தில் வண்ணமயமான உடையணிந்த பெண்கள் குழு பாரதநாட்டிய நிகழ்ச்சியை ‘தவில்’ மற்றும் ‘நாதஸ்வரம்’ இசையுடன் வழங்கினர்.
மகாபலிபுரத்தில், இரண்டு தலைவர்களும் ஒரு கலாச்சார நிகழ்ச்சியைக் கண்டு களித்தனர். இது கலாக்ஷேத்ராவைச் சேர்ந்த நடனக் கலைஞர்களால் நிகழ்த்தப்பட்டது.
இந்த விருந்தோம்பலால் தான் மிகவும் சந்தோதமடைந்துள்ளதாக ஜி ஜின்பிங் கூறியதாக வெளியுறவு செயலாளர் விஜய் கோகலே குறிப்பிட்டுள்ளார்.
இரு தலைவர்களும் தாஜ் ஃபிஷர்மேனில் அவர்கள் புறப்படுவதற்கு முன்பு பேச்சுவார்த்தை நடத்தினர்.