/tamil-ie/media/media_files/uploads/2023/07/RN-Ravi-I.jpg)
தமிழக கவர்னர் ஆர்.என். ரவி
உயர்கல்வி நிறுவனங்களுக்கு ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை அமல்படுத்துவதற்கான அரசின் முடிவு குறித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பல்கலைக்கழக மானியக் குழுவிடம் (யுஜிசி) கருத்தைக் கேட்டிருந்தார்.
இதற்கிடையில், தமிழ்நாடு மாநில உயர்கல்வி கவுன்சில் (TANSCHE) வடிவமைத்துள்ள பொதுப் பாடத்திட்டத்தைப் பின்பற்ற எந்தக் கடமையும் இல்லை என்று ஆளுநர், ஆகஸ்ட் 21, 2023 அன்று மாநிலப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில், பல்கலைக்கழக மானியக் குழு (கல்லூரிகள் மீது தன்னாட்சி அந்தஸ்து வழங்குதல் மற்றும் தன்னாட்சிக் கல்லூரிகளில் தரத்தைப் பராமரிப்பதற்கான நடவடிக்கைகள்) விதிமுறைகள், 2023, தன்னாட்சிக் கல்லூரிகள் ஏற்கனவே உள்ள படிப்புகளை மறுபரிசீலனை செய்ய உதவுகிறது என்று ஆளுநருக்கு பதிலளித்த யுஜிசி தலைவர் எம். ஜெகதேஷ் குமார் தெரிவித்தார்.
மேலும், பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர், கவர்னர் ரவிக்கு எழுதிய கடிதத்தில், அதன் விதிமுறைகள் தன்னாட்சி நிறுவனங்கள் தங்கள் சொந்த பாடத்திட்டத்தை வடிவமைத்து பரிந்துரைக்க அனுமதிக்கிறது எனவும் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு ஒரே மாதிரியான பொதுப் பாடத்திட்டத்தை உயர்கல்வித் துறை அமல்படுத்தியுள்ளது. இதற்கு தன்னாட்சி கல்லூரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இது குறித்து பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர், “இந்த ஆண்டு 90 சதவீதம் கல்வி நிறுவனங்களில் இந்த பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுவிட்டது. மீதமுள்ளவர்கள் அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்த உள்ளனர்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.