தி. நகரில் டிராபிக் போலீசாரால் தாக்கப்பட்ட இளைஞர் பிரகாஷூக்கு ஜாமீன்!

சிறு வயதிலியே தனது தந்தையை இழ்ந்த பிரகாஷ் தாயின் மீது அதிக அன்பு வைத்திருந்துள்ளார்.

தி நகரில்  ஹெல்மேட் போடாத காரணத்தால் டிராபிக் போலீசாரால் வைத்து நடுரோட்டில் தாக்கப்பட்ட  இளைஞர் பிரகாஷ் ஜாமீனில் வெளிவந்தார்.

கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி, சென்னை தி. நகரில் மூன்று டிராபிக் போலீஸ் சேர்ந்து, இளைஞர் ஒருவரை  கடுமையாக தாக்கும் வீடியோ ஒன்று வெளியாகியது.  அந்த வீடியோ வெளியான சில நிமிடங்களிலே சமூக வலைத்தளங்களில் தீயாகம் பரவியது. அதன் பின்பு,  அந்த சம்பவம் குறித்து அடுத்தடுத்த தகவல்கள் வெளிவந்தன.

வீடியோவில் டிராபிக் போலீசாரால் தாக்கப்படும் இளைஞர் பெயர் பிரகாஷ்.  அவர், தன்னுடைய இருசக்கர வாகனத்தில் தாய் மற்றும் சகோதிரியுடன் வெளியில் சென்றுள்ளார். அப்போது அவரின் வாகனத்தை மறைத்த டிராபிக் போலீசார்,  ஹெல்மேட் அணியாமல் சென்றத்திற்காக  பிரகாஷீடம் கேள்வி எழுப்பியுள்ளனர்

அதற்கு பிரகாஷ்,  போலீசாரிடம்  வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார்.  இந்த வாக்குவாதம் முற்றி ஒரு கட்டத்தில்  பிரகாஷூக்கும், போலீசாருக்கும் இடையில், மோதல் ஏற்பட்டது. சண்டையை விளக்கி விட சென்ற, பிரகாஷீன் தாயையும் போலீசார் கடுமையாக தாக்கினர்.

இதைக் கண்டு ஆத்திரமடைந்த பிரகாஷ்  போலீசாரை பதிலுக்கு தாக்கினார். கடைசியில்,  போலீஸ் உடையில் இருந்த காவல் துறையினரை தாக்கிய குற்றத்திற்காக பிரகாஷை காவல் துறையினர் கைது செய்து அழைத்து சென்றனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு பொதுமக்கள் மத்தியிலும் எதிர்ப்பு கிளம்பியது.

கைது செய்த பிரகாஷை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து தேசிய மனித உரிமை ஆணையமும் டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பியது.

தாக்குதல் நடத்திய போலீஸ்

இளைஞரையும், அவரது தாயாரையும் பொதுமக்கள் முன்னிலையில் அடித்து உதைத்த போலீஸ். ஹெல்மெட் போடாததற்கு தண்டனையாம்…

Posted by IETamil on 3 एप्रिल 2018

இந்நிலையில், நேற்று,  சிறையில் அடைக்கப்பட்டிருந்த  இளைஞர் பிரகாஷ் ஜாமீனில் வெளியே வந்தார்.  சைதாப்பேட்டை 17-வது குற்றவியல் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.  இதனையடுத்து, புழல் சிறையிலிருந்து பிரகாஷ் விடுதலையாகி வீட்டுக்குச் சென்றார்.

அவரை  நேரில் பார்த்த தாய் சங்கீதா , அவரை கட்டி அணைத்து அழுதார். சிறு வயதிலியே தனது தந்தையை இழ்ந்த பிரகாஷ் தாயின் மீது அதிக அன்பு வைத்திருந்துள்ளார். நடுரோட்டில் வைத்து போலீசார் சங்கீதாவை தாக்கியததை பார்த்து பொறுத்துக் கொள்ள முடியாமல் தான் பிரகாஷ்  போலீசாரை தாக்கியுள்ளார்.

சிறுவனின் கையை உடைக்க முயலும் டிராபிக் போலீஸ்

தாயின் கண் முன்னே, மகனின் கையை உடைக்க முயலும் டிராபிக் போலீசாரின் மனிதாபிமானமற்ற செயல். போலீசாருக்கு இந்த அதிகாரத்தை யார் கொடுத்தது?

Posted by IETamil on 2 एप्रिल 2018

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close