/tamil-ie/media/media_files/uploads/2022/09/tamil-indian-express-2022-09-02T103144.300.jpg)
T.T.V.Dhinakaran
AMMK leader T.T.V.Dhinakaran Tamil News: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உடல் நலக்குறைவால் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உணவு ஒவ்வாமை காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு தஞ்சாவூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு ஓரிரு நாட்களில் வீடு திரும்பலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/09/tamil-indian-express-2022-09-02T112957.409.jpg)
இது தொடர்பாக ட்விட்டர் ட்விட்டர் பக்கத்தில் அவர், "சிறிய உடல்நலக் குறைவு (உணவு ஒவ்வாமை) காரணமாக தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு ஓரிரு நாட்களில் வீடு திரும்பலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
எனவே, கழக உடன்பிறப்புகள் யாரும் கவலைப்பட வேண்டாம். நேரில் பார்க்க வருவதையும் தவிர்க்க வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
எனவே, கழக உடன்பிறப்புகள் யாரும் கவலைப்பட வேண்டாம். நேரில் பார்க்க வருவதையும் தவிர்க்க வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.2/2
— TTV Dhinakaran (@TTVDhinakaran) September 2, 2022
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.