Advertisment

தீராத நுரையீரல் தொற்று: வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் வெள்ளையன் மரணம்

உடல்நலக்குறைவால் அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்ட வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் வெள்ளையன் சிகிச்சை பலனின்றி இன்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

author-image
WebDesk
New Update
T Vellaiyan Federation of Traders Association president passed away Tamil News

வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் வெள்ளையன் (76) காலமானார்

தமிழ்நாட்டில் உள்ள வணிகர்களின் குரலாக, சாதி, மத, அரசியல்  பேதமின்றி செயல்பட்டு வந்தவர் த. வெள்ளையன். இவரது வணிகர் சங்க பேரவை மாநிலம் முழுவதும் செயல்பட்டு வருகிறது. இவர் வயது முதிர்வு காரணமாக, பல்வேறு உடல்நலப் பாதிப்புக்கு ஆளான நிலையில், கடந்த ஒரு வருடமாக வணிகர் சங்க நிகழ்ச்சிகளில் அதிக அளவில் கலந்துகொள்வதை தவிர்த்து வந்தார். மேலும் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்ற வந்தார்.

Advertisment

இந்நிலையில், கடந்த 3 ஆம் தேதி  திடீரென மூச்சுவிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர் சென்னை அமைந்தக்கரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்.ஜி.எம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அவருக்கு நுரையீரல் தொற்று அதிகமான நிலையில், அவரை மருத்துவர்கள், கடந்த 5 ஆம் தேதி தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றி சிகிச்சை அளித்தனர். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், உடல்நலக்குறைவால் அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்ட வெள்ளையன் (76) சிகிச்சை பலனின்றி இன்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Death
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment