Advertisment

Tamil News Today: ஆட்சியை தக்கவைப்பாரா நிதீஷ்? பீகார் சட்டப் பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

Tamil News updates: அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
bihar nitish

பெட்ரோல், டீசல் விலை

Advertisment

சென்னையில் 631-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு  ரூ.92.24 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

இன்று சென்னை வருகிறார் ஜெ.பி.நட்டா

பொதுக் கூட்டத்தில் பங்கேற்க பா.ஜ.க தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா இன்று மாலை சென்னை வருகிறார். தொடர்ந்து தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்தும் ஆலோசிக்கிறார். இதையடுத்து இன்று இரவே டெல்லி புறப்பட்டு செல்கிறார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

 • Feb 11, 2024 22:14 IST
  கர்நாடகாவில் பரவி வரும் கியாசனூர் வன நோய் - சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

  கர்நாடகாவில் பரவி வரும் கியாசனூர் வன நோயால் 53 பேர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 3-8 நாட்கள் வரை காய்ச்சல், தலைவலி, வாந்தி, கடுமையான உடல் வலி போன்ற அறிகுறிகள் இருக்கும். இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. • Feb 11, 2024 20:41 IST
  நரேந்திர மோடிக்கு மிகவும் பிடித்த மாநிலம் தமிழ்நாடு - ஜெ.பி. நட்டா

  பா.ஜ.க தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா: “தேசியத்தில் தமிழகத்தின் பங்கு முக்கியமானது. பா.ஜ.க தலைவர்களின் இதயங்களில் எப்போதும் இருந்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகவும் பிடித்த மாநிலம் தமிழ்நாடு;  பிரதமர் நரேந்திர மோடி எங்கு சென்றாலும், தமிழ் குறித்தும், தமிழ்நாடு குறித்தும் பேசி வருகிறார். நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் செங்கோல் நிறுவப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கலை, இலக்கியம் உள்ளிட்டவற்றில் தமிழக சிறந்து விளங்குகிறது” என்று கூறினார். • Feb 11, 2024 20:21 IST
  தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாட்டில் சீரழிவு; ஜெ.பி நட்டா குற்றச்சாட்டு

  “திமுக ஆட்சியில் தமிழ்நாடு சீரழிந்து வருகிறது. மாநில அரசுக்கு மனசாட்சி, ஜனநாயகம் என்பது இல்லை. நான் வரும்போது கூட தெருவிளக்குகள் அணைக்கப்பட்டன” என பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி நட்டா சென்னையில் கூறினார். • Feb 11, 2024 19:38 IST
  கர்நாடகா: 38 பயிற்சி மாணவர்கள் சஸ்பெண்ட்

  கர்நாடகாவில் உள்ள மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள் இருவர் ரீல்ஸ் எடுத்த விவகாரத்தில், 38 பயிற்சி மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். • Feb 11, 2024 19:05 IST
  பாகிஸ்தானில் வாக்கு எண்ணிக்கை முடிவு: இம்ரான் கான் ஆதரவாளர்கள் முன்னிலை

  பாகிஸ்தானில் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில், இம்ரான் கான் ஆதரவு பெற்ற சுயேச்சைகள் இறுதிக் கணக்கில் முன்னிலை பெற்றுள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளன. • Feb 11, 2024 18:58 IST
  வேட்டி சட்டையில் ஜெ.பி. நட்டா

  சென்னையில் என் மண் என் மக்கள் நடைபயணத்தில் கலந்துகொள்ளும் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி நட்டா வேட்டி சட்டையில் காணப்பட்டார். • Feb 11, 2024 18:06 IST
  பாரத ரத்னா விருது; உத்தவ் தாக்கரே பரபரப்பு கேள்வி


  பீகார் மக்களின் வாக்குகளை பெறவே கர்பூரி தாகூருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
  முன்பெல்லாம் பாரத ரத்னா விருது ஆண்டுக்கு இத்தனை பேருக்குதான் என்ற விதிமுறைகள் இருந்தன. தற்போது மனதில் தோன்றும் நபர்களுக்கெல்லாம் பாரத ரத்னா விருது அளிக்கிறார்கள்” என மராட்டிய முன்னாள் முதல் அமைச்சரும், சிவசேனா கட்சித் தலைவருமான உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். • Feb 11, 2024 18:03 IST
  உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

  வார விடுமுறையை ஒட்டி உதகை அரசு தாவரவியல் பூங்காவில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். வெயிலுடன் சில்லென்ற காலநிலை ரம்மியமாக உள்ளதெனவும், இங்கிருந்து செல்ல மனமில்லை எனவும் சுற்றுலாப் பயணிகள் தெரிவித்தனர். • Feb 11, 2024 16:23 IST
  சில மாநில அரசுகள் சக்திக்கு மீறிய தேர்தல் வாக்குறுதிகளை அளித்துவிட்டு நிதியின்றி திணறுகின்றனர் - அமித்ஷா

  சில மாநில அரசுகள் தங்கள் சக்திக்கு மீறிய தேர்தல் வாக்குறுதிகளை அளித்துவிட்டு நிதியின்றி திணறுகின்றனர். இது போன்ற மாநிலங்களுக்கு மத்திய அரசு உதவ இயலாத நிலை உள்ளது என மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார் • Feb 11, 2024 16:14 IST
  பா.ஜ.க தேர்தல் குழுவினருக்கான பயிலரங்கம்; 1000க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்பு

  செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் பா.ஜ.க தேர்தல் மேலாண்மை குழுவினருக்கான பயிலரங்கம் நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதிலும் இருந்து 1000க்கும் மேற்பட்ட பா.ஜ.க நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர் • Feb 11, 2024 15:55 IST
  `ரோகித் சர்மா' சாதனையை சமன் செய்த `மேக்ஸ்வெல்'

  மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் சதம் விளாசிய ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல், T20-யில் 5 சதங்களை அடித்து `ரோகித் சர்மா' சாதனையை சமன் செய்துள்ளார் • Feb 11, 2024 15:40 IST
  இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து ஜாக் லீச் விலகல்

  இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து காயம் காரணமாக இங்கிலாந்து வீரர் ஜாக் லீச் விலகியுள்ளார். • Feb 11, 2024 14:56 IST
  உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்; நாடாளுமன்ற தொகுதி வாரியாக கூட்டங்களை அறிவித்த தி.மு.க

  நாடாளுமன்ற தேர்தலுக்கான பரப்புரையை `உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்' என்ற பெயரில் தி.மு.க அறிவித்துள்ளது. `பாசிசம் வீழட்டும், இந்தியா வெல்லட்டும்' என்ற முழக்கத்துடன் நாடாளுமன்ற தொகுதி வாரியாக கூட்டங்கள் நடைபெறும் என தி.மு.க அறிவித்துள்ளது • Feb 11, 2024 14:16 IST
  3’ படத்தின் வெற்றியை ‘Why this கொலவெறி’ பாடல் விழுங்கிவிட்டது - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

  3’ படத்தின் வெற்றியை ‘Why this கொலவெறி’ பாடல் விழுங்கிவிட்டது என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார் • Feb 11, 2024 14:13 IST
  சென்னை தாம்பரம் - கடற்கரை இடையே மின்சார ரயில் சேவை ரத்து

  பராமரிப்பு பணிகள் காரணமாக, சென்னை தாம்பரம் - கடற்கரை இடையே மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. தாம்பரம் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதால், ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. காலை 10.30 முதல் மாலை 4.30 மணி வரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது • Feb 11, 2024 13:30 IST
  பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை மீண்டும் உறுதியாகச் சொல்கிறேன்

  பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை மீண்டும் உறுதியாகச் சொல்கிறேன். அதிமுக-பாமக ரகசிய கூட்டணி என  பேசுகிறார்கள். கூட்டணி இல்லை என்று ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றிவிட்டோம். இ.பி.எஸ் • Feb 11, 2024 13:27 IST
  மக்கள் மீது வரிச் சுமையை ஏற்றி திமுக அரசாங்கம் நடத்துகிறது

  “மக்கள் மீது வரிச் சுமையை ஏற்றி திமுக அரசாங்கம் நடத்துகிறது; அத்தியாவசியப் பொருட்களின் விலை 40% உயர்ந்துள்ளது; மக்களைப் பற்றி கவலைப்படாத அரசாங்கமாக திமுக இருக்கிறது; திமுக ஆட்சியில் மக்கள் துன்பப்படுகிறார்கள்; அதிமுக ஆட்சி அமைக்கும் காலத்தில் தமிழ்நாட்டு மக்கள் பாதுகாப்பாக உணருவார்கள்” - கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி  • Feb 11, 2024 13:03 IST
  13 பிராந்திய மொழிகளில் மத்திய ஆயுதப்படை காவலர் தேர்வை நடத்த முடிவு

  தமிழ் உட்பட 13 பிராந்திய மொழிகளில் மத்திய ஆயுதப்படை காவலர் தேர்வை நடத்த உள்துறை அமைச்சகம் முடிவு • Feb 11, 2024 13:02 IST
  கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: கூடுதலாக 612 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது

  கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று மட்டும் 1.07 லட்சம் பயணிகள் அரசு பேருந்துகளில் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தகவல் தினசரி 1,124 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் கூடுதலாக 612 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது - போக்குவரத்து துறை • Feb 11, 2024 12:37 IST
  “தமிழ்நாடு கொடுக்கும் ரூ.6 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வருவாய்க்கு மத்திய அரசு ரூ.1,26,000 கோடி மட்டுமே கொடுக்கிறது

  “தமிழ்நாடு கொடுக்கும் ரூ.6 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வருவாய்க்கு மத்திய அரசு ரூ.1,26,000 கோடி மட்டுமே கொடுக்கிறது; அதன்படி பார்த்தால் 1 ரூபாய்க்கு மத்திய அரசு 23 பைசாக்கள் மட்டுமே திருப்பி தருகிறது” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் • Feb 11, 2024 12:15 IST
  திமுக அரசு இன்றைய மக்களின் தேவைகள் மட்டுமல்லாது எதிர்கால தேவைகளையும் சிந்தித்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறது- உதயநிதி

  திமுக அரசு இன்றைய மக்களின் தேவைகள் மட்டுமல்லாது எதிர்கால தேவைகளையும் சிந்தித்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறது; மகளிர் உரிமைத்தொகை, கட்டணமில்லாப் பேருந்து பயணம், கல்லூரி மாணவிகளுக்கு ஊக்கத்தொகை, இல்லம் தேடி கல்வி போன்ற திட்டங்களை தெலங்கானா அரசு முன்மாதிரியாக எடுத்துக் கொள்கிறது-உதயநிதி ஸ்டாலின்  • Feb 11, 2024 12:12 IST
  திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் கருத்துக்கேட்பு கூட்டம் சேலத்தில் நடைபெறுகிறது

  திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் கருத்துக்கேட்பு கூட்டம் சேலத்தில் நடைபெற்று வருகிறது; தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் தலைவர் கனிமொழி எம்.பி. தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தொழில்துறை, விவசாய அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர் • Feb 11, 2024 11:47 IST
  திருப்பூரில் ரூ. 1,191 கோடி மதிப்பிலான புதிய குடிநீர் திட்டம் : தொடங்கி வைத்த உதயநிதி

  திருப்பூரில் ரூ. 1191 கோடி மதிப்பிலான புதிய குடிநீர் திட்டம் மற்றும் ரூ.70.43 கோடி மதிப்பிலான 165 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தார். ரூ. 53.45 கோடி மதிப்பிலான புதிய பல்நோக்கு கூடம், ரூ.12.87 கோடி மதிப்பிலான புதிய பன்னடுக்கு வாகன நிறுத்தம் ஆகியவற்றையும் தொடங்கி வைத்தார்.  • Feb 11, 2024 11:20 IST
  கஞ்சா போதையில் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கிய இளைஞர்கள்

  மதுரை: ஆத்திகுளம் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திற்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பின் ஜன்னல் கண்ணாடிகள் கஞ்சா போதையில் இளைஞர்கள் அடித்து நொறுக்கினர்; இந்தச் சம்பவத்திற்கு காரணமான 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் • Feb 11, 2024 11:18 IST
  லாரி ஆலங்குளம் அருகே கரும்புளியூத்து மின்கம்பத்தில் மோதி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

  தூத்துக்குடியில் இருந்து தென்காசி நோக்கி அதிக அளவுக்கு பாரம் ஏற்றி வந்த கனரக லாரி ஆலங்குளம் அருகே கரும்புளியூத்து மின்கம்பத்தில் மோதி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து; நல்வாய்ப்பாக பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை • Feb 11, 2024 10:45 IST
  சைதை துரைசாமியின் ரத்த மாதிரிகள் சேகரிப்பு

  இமாச்சலில் வெற்றி துரைசாமி மாயமான விவகாரத்தில், அவரது பெற்றோரிடம் ரத்த மாதிரிகள் சேகரிப்பு

  இமாச்சல் சட்லஜ் நதியில், கார் விபத்துக்குள்ளானதில் வெற்றி துரைசாமி மாயமானார்

  விபத்து நடந்த பகுதியில் இருந்து, மூளை திசுக்கள் கண்டெடுக்கப்பட்டு டிஎன்ஏ பரிசோதனை

  தற்போது, சைதை துரைசாமி மற்றும் அவரது மனைவியிடம் ரத்த மாதிரிகள் சேகரிப்பு

  இரு ரத்த மாதிரிகளையும் ஒப்பிட்டு பார்த்தால்தான் கிடைக்கப்பெற்ற ரத்த மாதிரிகள் யாருடையது என தெரியவரும் • Feb 11, 2024 10:23 IST
  கிளாம்பாக்கம் பிரச்சினை உள்நோக்கம் கொண்டது: சிவசங்கர்

  "ஏப்ரல் மாதத்துக்குள் ஆம்னி பேருந்து நிறுத்தும் இடம் பயன்பாட்டுக்கு வரும்". 2 நாட்களாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பற்றி தேவையற்ற வதந்தி பரப்புகிறார்கள்"

  "80% பேருந்துகள் கிளாம்பாக்கத்திலும், 20% பேருந்துகள் மாதவரத்தில் இயக்கம்"

  "கோயம்பேட்டிலும் நள்ளிரவு 12 மணி முதல் 4 மணி நேரத்தில் பேருந்துகள் இயக்குவதில்லை"

  "இந்த சமயத்தில் இரண்டு நாட்களாக பிரச்சினை தொடருவது உள்நோக்கம் என சந்தேகம் எழுகிறது"

  "ஆம்னி பேருந்துகளில் பயணிகளை ஏற்றிக் கொள்ள இரண்டு இடம் அனுமதிக்கப்பட்டுள்ளது"

  "அதிகப்பட்சமாக 585 ஆம்னி பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன"

  "கோயம்பேடு ஆம்னி பேருந்து மீண்டும் இயங்குவது போன்று தோற்றத்தை உருவாக்க பார்க்கிறார்கள்"

  "இந்த சமயத்தில் இரண்டு நாட்களாக பிரச்சினை தொடருவது உள்நோக்கம் என சந்தேகம் எழுகிறது"

  "நேற்று முன் தினம் வழக்கத்தை விட திருச்சிக்கு 70 பேருந்துகள் கூடுதலாகவே இயக்கம்" • Feb 11, 2024 09:47 IST
  முடிச்சூரில் அமைச்சர்கள் ஆய்வு

  முடிச்சூரில் ஆம்னி பேருந்துகளுக்கான நிறுத்துமிடம் அமைக்கும் பணி

  ஆம்னி பேருந்து நிறுத்துமிடத்தில் அமைச்சர்கள் நேரில் ஆய்வு

  அமைச்சர்கள் சேகர்பாபு, சிவசங்கர் ஆய்வு செய்கின்றனர் • Feb 11, 2024 09:13 IST
  பராமரிப்புப் பணி: புறநகர் ரயில் சேவைகள் ரத்து

  பராமரிப்புப் பணி - 44 புறநகர் ரயில் சேவைகள் இன்று ரத்து

  சென்னையில் பராமரிப்புப் பணி காரணமாக 44 புறநகர் ரயில் சேவைகள் இன்று ரத்து. கோடம்பாக்கம்- தாம்பரம் இடையே இன்று காலை 11 மணி முதல் மதியம் 3.30 மணி வரை பராமரிப்புப் பணி நடைபெறுகிறது. செங்கல்பட்டு- 
  சென்னை கடற்கரை இடையேயான புறநகர் ரயில் சேவைகள்  ரத்து • Feb 11, 2024 08:34 IST
  மை வி3 ஆட்ஸ் செயலி முடக்கம்

  மை வி3 ஆட்ஸ் செயலியை முடக்கிய கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார்

  புதிதாக யாரும் இணைய முடியாத வகையில், மை வி3 ஆட்ஸ் செயலி முடக்கம்

  "ஏற்கனவே இணைந்து தினமும் வீடியோ பார்த்து பணம் சம்பாதிப்பவர்கள் தொடர்ந்து செயலியை உபயோகப்படுத்தலாம்"

  மை வி3 ஆட்ஸ் உரிமையாளர் சக்தி ஆனந்தன் நேற்று இரவு கோவை பந்தய சாலை போலீசாரால் கைது செய்யப்பட்டார்

  சக்தி ஆனந்தனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதித்து, கோவை நீதிமன்றம் உத்தரவு

  சக்தி ஆனந்தனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நாளை நீதிமன்றத்தில் போலீசார் மனு அளிக்க உள்ளனர் • Feb 11, 2024 07:47 IST
  தி.மு.க வார் ரூம் அமைத்து அறிவிப்பு

  நாடாளுமன்ற தேர்தலுக்காக வார் ரூம் அமைத்து அறிவிப்பை வெளியிட்டது திமுக

  தொகுதி பார்வையாளர்கள் ஒருங்கிணைப்பு, பூத் கமிட்டி,பரப்புரை மேற்பார்வை =திமுக இணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை

  ஊடக விவாத குழு, நட்சத்திர பேச்சாளர்கள் பரப்புரை =திமுக துணை அமைப்பு செயலாளர் ஆஸ்டின் தலைமையில் குழு

  சட்டக் குழு மற்றும் தேர்தல் ஆணையம் =திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி தலைமையில் குழு

  காவல்துறை புகார்கள், பாதுகாப்பு விஷயங்களுக்கு ஒரு குழு மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் குழுவும் அறிவிப்பு

  ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா ஒரு வார் ரூம் அமைக்கப்படும் எனவும் திமுக தலைமை அறிவிப்பு • Feb 11, 2024 07:46 IST
  நேரக் காப்பாளருடன் பயணிகள் கடும் வாக்குவாதம்

  கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நேரக் காப்பாளருடன் பயணிகள் கடும் வாக்குவாதம்.

  கடலூர், விழுப்புரம், திண்டிவனம், பாண்டிச்சேரி, சிதம்பரம், நெய்வேலி, திருக்கோவிலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இல்லை என புகார்.

  விழுப்புரம் மண்டல நேரக்காப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பயணிகள் கடும் வாக்குவாதம். பயணிகள் சரமாரியாக கேள்வி எழுப்பியதால், அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற நேரக்காப்பாளர் • Feb 11, 2024 07:45 IST
  கிளாம்பாக்கத்தில் பயணிகள் மீண்டும் போராட்டம்

  கிளாம்பாக்கத்தில் பயணிகள் மீண்டும் போராட்டம். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், மீண்டும் அரசுப் பேருந்துகளை சிறைப்பிடித்து போராட்டம். நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இன்றும் 150க்கும் மேற்பட்டோர் போராட்டம்.

  போதிய அளவில் பேருந்துகள் இயக்கப்படவில்லை என பயணிகள் குற்றச்சாட்டுTamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment