/tamil-ie/media/media_files/uploads/2023/06/Thalavsi-sundaram.jpg)
தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ
நாகர்கோவிலில் அண்ணா விளையாட்டு திடல் முன்பு, மாவட்ட அ.தி.மு.க.வினர், திமுக ஆட்சிக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ பேசுகையில், “பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து பாசனத்துக்கு நீர் கடந்த 4ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கு இணங்க திறக்கப்பட்து.
ஆனால் கால்வாய்கள் முழுமையாக தூர்வாரப்படவில்லை. இதனால், கடை மடை நிலங்களுக்கு நீர் சென்றடையவில்லை.
சபாநாயகர் அப்பாவு அவரது அதிகாரத்தை பயன்படுத்தி ராதாபுரம் பகுதிக்கு நீர் திறந்து விட்டுள்ளார். மாவட்ட அமைச்சரும், அதிகாரிகளும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளனர்.
இது, குமரி மாவட்டத்தை பாலைவனமாக்கிவிடும். பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 42 அடி இருந்தால் ராதாபுரம் கால்வாய்க்கு நீரை திறக்கலாம். ஆனால் இன்றைய பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 38 அடி மட்டுமே உள்ளது.
மாவட்டத்தில் உள்ள சாலைகள் அனைத்தும் குண்டும், குழியுமாக உள்ளன. கொஞ்சம் எஞ்சியிருந்த சாலைகளும் அண்மையில் பெய்த மழையால் மேலும் பாதிக்கப்பட்டுள்ளன. மாவட்ட நிர்வாகம் சாலைகளை செப்பனிடும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும்.
செந்தில் பாலாஜி எங்கள் ஆட்சிகாலத்தில் செய்த ஊழலில் தான் சிக்கியுள்ளார்.செந்தில் பாலாஜியை இலக்காக இல்லாத அமைச்சராக தொடரக் கூடாது” என தளவாய் சுந்தரம் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.