Aiadmk | Pmk | Lok Sabha Election | 17ஆவது மக்களவையின் பதவிக்காலம் வருகிற ஜூன் மாதம் 16 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்தநிலையில்,18 ஆவது மக்களவை பொதுத்தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை கடந்த ஆண்டே இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கிவிட்டது.
இதற்கிடையில், நேற்று மாலை 3 மணிக்கு, 18 ஆவது மக்களவைக்கானத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் வாக்குப்பதிவு ஏப்.19ஆம் தேதி நடைபெறுகிறது. தொடர்ந்து, ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதைத் தொடர்ந்து கட்சிகள் தங்களது கூட்டணியை இறுதி செய்துவருகின்றன. தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரிகள், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் உள்ளன.
அ.தி.மு.க. அணியில் தேசிய கட்சிகள் எதுவும் இல்லை. புதிய தமிழகம், புரட்சிப் பாரதம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கூட்டணி வைத்துள்ளன. பா.ம.க.வின் நிலைப்பாடு இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
அவர்கள் பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. அணியில் மாறி மாறி பேச்சுவார்த்தை நடத்தினர் எனத் தகவல் வெளியானது. இந்த நிலையில், அந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.
இதற்கிடையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன், பாமக எம்எல்ஏ அருள் சந்தித்து இன்று (மார்ச் 17, 2024) பேச்சுவார்த்தை நடத்தினார். முதல்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியுற்ற நிலையில், மீண்டும் பேச்சுவார்த்தையை அவர்கள் தொடங்கியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கூட்டியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“