Advertisment

தாம்பரம் மாநகராட்சி எல்லை விரிவாக்கம்: மேலும் 15 ஊராட்சிகளை இணைக்க அரசு அனுமதி

தாம்பரம் மாநகராட்சி எல்லை விரிவாக்கம் செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது. இதில் மேலும் 15 ஊராட்சிகள் இணைகின்றன. தாம்பரம் மாநகராட்சி தற்போது 87 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ளது.

author-image
WebDesk
New Update
chennai corporation reserved mayor post for sc women, chennai corporation reserved 100 wards for women, dalit parties welcomes, சென்னை மாநகராட்சியில் 50 சதவீதம் வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கீடு, தலித் அரசியல் கட்சிகள் வரவேற்பு, urban local body polls, chenai, tambaram, avadi, tamilandu politics

உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் 2024ல் முடிவடைகிறது.

தாம்பரம் மாநகராட்சி, 2021ல் உருவாக்கப்பட்டது. தற்போது, செயிண்ட் தாமஸ் மவுண்ட் பஞ்சாயத்து யூனியனின் கீழ் உள்ள 15 கிராம பஞ்சாயத்துகளை இணைப்பதன் மூலம், கிரேட்டர் சென்னை மாநகராட்சியின் கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்கான 87 சதுர கிமீ முதல் 115 சதுர கிமீ வரை வளர உள்ளது.

Advertisment

2019ல் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தி மக்கள் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டதால், மாநகராட்சி அமைக்கப்பட்டபோது விடுபட்ட ஊராட்சிகளை இணைக்கும் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் முன்மொழிவுக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் 2024ல் முடிவடைகிறது.

இந்த 15 ஊராட்சிகளையும் இணைப்பதன் மூலம் தாம்பரம் மாநகராட்சியின் கீழ் சுமார் 6 லட்சம் மக்கள் வருவார்கள். கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.
இந்தப் பட்டியலில் அகரம்தென், மேடவாக்கம், கோவிலம்பாக்கம், கவுல் பஜார், முடிச்சூர், பெரும்பாக்கம், நன்மங்கலம், பொழிச்சலூர், திருசூலம், ஒட்டியம்பாக்கம், திருவாஞ்சேரி, வேங்கைவாசல், மதுரப்பாக்கம், மூவரசம்பட்டு, சித்தளபாக்கம் ஆகிய 15 ஊராட்சிகள் உள்ளன.

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த குடியிருப்பாளர் ஒருவர், “எங்களுக்கு அடிப்படை வசதிகளுடன் சிறந்த சாலைகள் இருக்கும். குறைகளை உயர் அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம்” என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tambaram
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment