தாம்பரம் ரயில் நிலையத்தில் நடைமேம்பாலப் பணிகள் நடைபெறவுள்ளதால் தாம்பரம் - சென்னை கடற்கரை இடையேயான புறநகர் மின்சார ரயில் சேவை ஜனவரி 5 ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகளின் வருகை குறைவால் மின்சார ரயில் சேவையில் ஞாயிற்றுக்கிழமைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். பயணிகள் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் விதமாக இந்த பராமரிப்பு பணிகள் வாரம் வாரம் மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் தாம்பரம் பணிமனையில் இன்று பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் சென்னை கடற்கரை - தாம்பரம், தாம்பரம் - சென்னை கடற்கரை இடையே மின்சார ரயில் சேவை இன்று ஜனவரி 5 ரத்து செய்யபட்டுள்ளது.
தாம்பரம் ரயில் நிலையத்தில் நடைமேம்பால பணிகள் நடைபெற உள்ளதால் தாம்பரம்- சென்னை கடற்கரை இடையேயான புறநகர் மின்சார ரயில் சேவை ஜனவரி 5 ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே நிர்வாகத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்லாவரம் - கடற்கரை, செங்கல்பட்டு - கூடுவாஞ்சேரி இடையே பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். அதேபோல காலை 7 மணி முதல் 11:00 மணி வரை சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு மின்சார ரயில்கள் இரு திசைகளிலும் அட்டவணைப்படி இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர், மாலை 4 மணிக்கு பின் வழக்கமான கால அட்டவணையில் அனைத்து மின்சார ரயில்களும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“