சபரிமலைக்கு சென்னை தாம்பரத்தில் இருந்து சென்ற பக்தர்களின் வேன் சாலை விபத்தில் சிக்கியது. சபரிமலை எருமேலி அருகே கன்னிமலை பகுதியில் பள்ளத்தில் வேன் கவிழ்ந்த இந்த விபத்தில் 10 வயது சிறுமி சங்கமித்திரா உயிரிழந்தார்.
இந்த விபத்தில் 17 பேர் காயமுற்றனர். இது தொடர்பாக கேரள உயர் நீதிமன்றத்தின் அமர்வு இந்த விபத்து தொடர்பாக தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது.
அத்துடன், விபத்து தொடர்பான அறிக்கையை இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என கேரளா அரசுக்கு தேவசம் பெஞ்ச் நீதிபதி அணில் கே நரேந்திரன் உத்தரவிட்டார்.
மேலும், ஏற்கனவே சபரிமலைக்கு செல்லும் வாகனங்களின் போக்குவரத்து கட்டுப்பாடு தொடர்பாக நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு செயல்படுத்தப்படுகிறதா எனவும் கேள்வி எழுப்பினார்.
செய்தியாளர் த.இ. தாகூர்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/