New Update
/indian-express-tamil/media/media_files/YTAFrTI7IAJYV3XFykIH.jpeg)
அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 23ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தாம்பரம் பணிமனையில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக தாம்பரம்- நாகர்கோவில் இடையே இயக்கப்படும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் சேவை 10 நாட்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்று ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், "தாம்பரம் பணிமனையில் வருகிற 23-ம் தேதி முதல் ஆகஸ்ட் 14-ம் தேதி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் செல்லும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்-20691) வருகிற 23-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. அதே போல, நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் (20692) வருகிற 22-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
ஜூலை 21 அன்று மாலை 3 மணிக்கு பிகாரிலிருந்து புறப்பட வேண்டிய மதுரை விரைவு ரயில் வண்டி எண். 22632 சென்னை எழும்பூர் வழியாக வருவதற்கு பதிலாக அரக்கோணம், செங்கல்பட்டு வழியாக இயக்கப்படும். சென்னை பயணிகள் வசதிக்காக பெரம்பூரில் நிறுத்தம் வழங்கப்படுகிறது.
ஜூலை 24 மற்றும் 31 ஆகிய நாட்களில் ராமேஸ்வரத்தில் (மண்டபம்) இருந்து இரவு 11.55 மணிக்கு புறப்பட வேண்டிய பனாரஸ் விரைவு ரயில் வண்டி எண். 22535, ஜூலை 28 அன்று மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து அதிகாலை 12.30 மணிக்கு புறப்பட வேண்டிய அயோத்தியா கண்ட்டோன்மெண்ட் ஷிரத்தா சேது விரைவு ரயில் வண்டி எண். 22613 ஆகியவை சென்னை எழும்பூர் வழியாக இயக்கப்படுவதற்கு பதிலாக செங்கல்பட்டு, அரக்கோணம் வழியாக இயக்கப்படும். சென்னை பயணிகள் வசதிக்காக பெரம்பூர் ரயில் நிலையத்தில் நிறுத்தம் வழங்கப்படுகிறது.
ஜூலை 23 முதல் 31 வரை காரைக்குடி - சென்னை எழும்பூர் பல்லவன் விரைவு ரயில் வண்டி எண். 12606 மற்றும் அதன் இணை ரயிலான சென்னை எழும்பூர் - மதுரை வைகை விரைவு ரயில் வண்டி எண். 12635 ஆகியவை சென்னை எழும்பூர் - செங்கல்பட்டு இடையில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
ஜூலை 22, 24, 27, 28, 29, 31 ஆகிய நாட்களில் செங்கோட்டையில் இருந்து மாலை 04.15 மணிக்கு புறப்பட வேண்டிய தாம்பரம் விரைவு ரயில் வண்டி எண். 20684, ஜூலை 24, 25, 28, 30 ஆகிய நாட்களில் தாம்பரத்திலிருந்து இரவு 9 மணிக்கு புறப்பட வேண்டிய செங்கோட்டை விரைவு ரயில் வண்டி எண். 20683 தாம்பரம் - விழுப்புரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
ஜூலை 24, 28, 29, 31 ஆகிய நாட்களில் தாம்பரத்தில் இருந்து இரவு 07.30 மணிக்கு புறப்பட வேண்டிய நாகர்கோவில் விரைவு ரயில் வண்டி எண். 22657 சென்னை எழும்பூரில் இருந்தும், ஜூலை 22, 23, 25, 29, 30 ஆகிய நாட்களில் மாலை 04.30 மணிக்கு புறப்பட வேண்டிய தாம்பரம் விரைவு ரயில் வண்டி எண். 22658 சென்னை எழும்பூர் வரையும் இயக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.