/indian-express-tamil/media/media_files/2025/10/24/tambaram-to-chengalpattu-2025-10-24-07-35-46.jpg)
தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 4வது ரயில் பாதை: ரூ.757 கோடி திட்டத்தால் போக்குவரத்து நெரிசல் குறையும்
தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 4-வது ரயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கு இந்திய ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது. 30.02 கி.மீ நீளமுள்ள இந்தப் புதிய ரயில் பாதை, பிராந்திய இணைப்பை மேலும் மேம்படுத்துவதுடன், ரயில் இயக்கத்தை சீராக்க உதவும். இந்த வழித்தடம் தெற்கு ரயில்வேயின் (Southern Railway - SR) நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது.
திட்டச் செலவு மற்றும் செயலாக்கம்
தாம்பரம்-செங்கல்பட்டு 4வது ரயில் பாதை திட்டம், தெற்கு ரயில்வேயால் 'திட்ட தலைப்பு - 15 (இரட்டிப்பாக்கல்)' என்பதன் கீழ் செயல்படுத்தப்பட உள்ளது. இது, இந்திய ரயில்வேயின் 'எரிசக்தி, கனிமம் மற்றும் சிமெண்ட் வழித்தடத்தின்' ஒரு பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த ரயில் திட்டத்திற்கு தற்போதைய மதிப்பீடு ரூ.713.56 கோடி ஆகும். பணிகள் நிறைவடையும்போது மொத்தச் செலவு ரூ.757.18 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
தற்போதைய ரயில் பிரிவு நிலை
தாம்பரம் - செங்கல்பட்டு பிரிவு தற்போது சென்னை கடற்கரை - விழுப்புரம் - திருச்சி - கன்னியாகுமரி மெயின் வழித்தடத்தில் 3-பாதை (Three-line) பகுதியாக உள்ளது. இது உள்ளூர் புறநகர் ரயில்கள் மற்றும் தொலைதூர விரைவு ரயில்கள் இரண்டிற்கும் சேவை செய்கிறது. எனவே, புறநகர், மெயில்/விரைவு மற்றும் சரக்கு போக்குவரத்து என அதிக பயன்பாட்டில் இருப்பதால், இந்தப் பகுதியில் அடிக்கடி நெரிசல் ஏற்படுவதுடன், இது ரயில்களின் கால அட்டவணை மற்றும் வழித்தட விரிவாக்கத் திறனைப் பாதிக்கிறது.
4-வது பாதையின் அவசியம்
தாம்பரம்-செங்கல்பட்டு இடையேயான ரயில் பாதை பயன்பாட்டுத் திறன் சுமார் 87% ஆக உள்ளது. இத்திட்டம் மேற்கொள்ளப்படாவிட்டால், பயன்பாடு 136% வரை உயரும் என்று தெற்கு ரயில்வே தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. புதிய 4-வது ரயில் பாதை, நெரிசலைக் குறைக்க, பிரத்தியேக புறநகர் ரயில் சேவையை செங்கல்பட்டு வரை நீட்டிக்க, மற்றும் சாலை வழியாகச் செல்லும் போக்குவரத்தை ரயில் பாதைக்கு மாற்ற ஊக்குவிக்க உதவும் என்று தெற்கு ரயில்வே மேலும் கூறியுள்ளது. இதனால் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து ஆகிய இரண்டும் பயன்பெறும்.
பிராந்திய இணைப்புக்கு 4-வது பாதை ஏன் முக்கியம்?
தாம்பரம் - செங்கல்பட்டு 4வது ரயில் பாதை திட்டம், பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதிலும், உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும் முக்கியப் பங்கு வகிக்க உள்ளது. இத்திட்டம் ஏன் முக்கியமானது என்பதற்கான காரணங்கள் இங்கே:
பயணிகளுக்கு நன்மை: தாம்பரம், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு மற்றும் ஸ்ரீபெரும்புதூர் சுற்றியுள்ள பகுதிகளில் புறநகர் போக்குவரத்து அதிகரித்து வருவதுடன், பெரிய அளவிலான குடியிருப்பு மற்றும் தொழில் துறை வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த 4வது பாதை தினசரி பயணிகள், பள்ளி/கல்லூரி மாணவர்கள், அலுவலகம் செல்வோர், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள், அரசு ஊழியர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும்.
கிளாம்பாக்கம் இணைப்பு: இது தெற்கு மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளுக்குப் பெரிதும் பயனளிப்பதுடன், நெரிசலைக் குறைக்கும். மேலும், கிளாம்பாக்கம் ரயில் நிலையம் மற்றும் அதிலிருந்து புதிய கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரையிலான புறநகர் ரயில் போக்குவரத்தை சீராக்குவதன் மூலம், தினசரி பயணிகளுக்கான இணைப்பு மேம்படும்.
விமான நிலையம்: காஞ்சிபுரம் அருகே அமையவிருக்கும் புதிய விமான நிலையம், இந்தப் போக்குவரத்து வழித்தடத்தில் பயணத் தேவையை மேலும் அதிகரிக்கும். எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்ய புதிய பாதை உதவும்.
செயல்திறன் மேம்பாடு: தாம்பரம் ஒரு முக்கிய ரயில்வே முனையமாக (Coaching Terminal) மேம்படுத்தப்படும் போது, இந்த புதிய பாதை புறநகர் மற்றும் விரைவு ரயில் சேவைகளைப் பிரித்து, எதிர்காலப் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்யும். இது செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதுடன், பயணிகளுக்கான பயண நேரத்தைக் குறைக்கும்.
வருவாய் மற்றும் சரக்கு போக்குவரத்து: ஒரகடம், படப்பை மற்றும் காஞ்சிபுரம் இடையே பல தொழில் பிரிவுகள் மற்றும் சிப்காட்கள் (SIPCOT) இருப்பதால், இத்திட்டத்தால் ஆண்டுக்கு 1.344 மில்லியன் டன் கூடுதல் சரக்குப் போக்குவரத்து உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், திட்டம் செயல்பாட்டுக்கு வந்த பிறகு ரூ.157 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us