விடுமுறை நாட்களை முன்னிட்டு தாம்பரம் முதல் நாகர்கோவில் வரை செல்லும் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ரயில் எண் 06041 தாம்பரம் – நாகர்கோவில் ரயில் தாம்பரத்தில் இருந்து இரவு 7.30 மணிக்கு புறப்படும். நாகர்கோவிலுக்கு காலை 7.10 மணிக்கு சென்று சேரும். செப் 15, 22, 29 மற்றும் அக்டோபர் 6, 13, 20 மற்றும் 27 தேதிகளில் செயல்படும் .
ரயில் எண்: 06042 நாகர்கோவில் – தாம்பரம் ரயில் நாகர்கோவிலில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு, தாம்பரத்திற்கு அதிகாலை 4.10 மணிக்கு சென்று சேரும். இந்த ரயில் செப்டம்பர் மாதம் 16, 23, 30 ஆக்டோபர் 7, 14, 21 மற்றும் 28 தேதிகளில் செயல்படும்.
இந்த ரயிலில் ஒரு ஏசி 2 டயர் ரயில் பெட்டி, 6 ஏசி 3 டயர் பெட்டிகள், 9 சிலீப்பர் கிளாஸ், 2 ஜெனரல் செக்கண்ட் கிளாஸ் மற்றும் 2 செக்கண்ட் கிளாஸ் பெட்டிகள் உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“