Coimbatore, Madurai, Trichy News Highlights: நீட் தேர்வு - மாணவர்கள் ஏமாந்தது தான் மிச்சம் - இ.பி.எஸ் பேச்சு

Coimbatore, Madurai, Trichy News Live- 15 July 2025- கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

Coimbatore, Madurai, Trichy News Live- 15 July 2025- கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
EPS campaign

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 19,760 கன அடியில் இருந்து 17,845 கன அடியாக சரிந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.66 அடி; நீர் இருப்பு 92.93 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 18,500 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாய் வழியாக 500 கனஅடி நீர் வெளியேற்றம்.

  • Jul 15, 2025 23:34 IST

    மனைவியின் ஆபாச புகைப்படம் வெளியிட்ட கணவர் 3 ஆண்டுக்கு பின் கைது

     நாகையில் கேட்ட வரதட்சணை கொடுக்காத ஆத்திரத்தில் சவுதி அரேபியாவில் இருந்து போலி பேஸ்புக் கணக்கு உருவாக்கி மனைவியின் புகைப்படத்தை பதிவேற்றி ஆபாசமாக சித்தரித்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். 2022ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து போலீசார் அனைத்து விமான நிலையங்களுக்கும் ரெட் நோட்டீஸ் அனுப்பியது.  அந்த நபர், மும்பை விமான நிலையம் வந்த நிலையில், அவரது பாஸ்போர்ட்டை குடியுரிமை அதிகாரிகள் சரிபார்க்கும்போது, வழக்கில் தேடப்பட்டவர் என்பது தெரியவர கைது செய்யப்பட்டார்



  • Jul 15, 2025 20:39 IST

    நீட் தேர்வு - மாணவர்கள் ஏமாந்தது தான் மிச்சம் - இ.பி.எஸ் பேச்சு 

    "தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து என நம்பிய மாணவர்கள் ஏமாந்தது தான் மிச்சம். நீட் தேர்வு ரத்து ரகசியம் தெரியும் என்றார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். நீட் தேர்வு ரத்தானதா?" என்று பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 



  • Advertisment
  • Jul 15, 2025 19:45 IST

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

    ஓசூர் மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று தண்ணீர் வரத்து குறைந்து உள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க கடந்த 20 நாட்களாக, சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருவதால், ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கி மாவட்ட ஆட்சியர் ஆர்.சதீஷ் உத்தரவிட்டுள்ளார்.



  • Jul 15, 2025 18:31 IST

    2026-ல் அமையப்போவது மன்னராட்சி அல்ல; மக்கள் ஆட்சி - இ.பி.எஸ்

    பெரம்பலூரில், குன்னம் பகுதியில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று பரப்புரை மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து, "2026-ல் அமையப்போவது மன்னராட்சி அல்ல; மக்கள் ஆட்சி" என அவர் பதிவிட்டுள்ளார்.



  • Advertisment
    Advertisements
  • Jul 15, 2025 17:45 IST

    திருப்புவனம் காவல் நிலையத்தில் சி.பி.ஐ அதிகாரிகள் ஆய்வு

    சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் போலீஸ் விசாரணையின் போது கோயில் காவலாளி அஜித் குமார் உயிரிழந்த வழக்கை சி.பி.ஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருப்புவனம் காவல் நிலையத்தில், சி.பி.ஐ அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.



  • Jul 15, 2025 17:20 IST

    அஜித்குமார் கொலை வழக்கு - 2வது நாளாக சிபிஐ விசாரணை

    டப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் 2வது நாளாக சிபிஐ விசாரணை திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித்குமாரிடம் விசாரணை நடத்திய இடம், நகைத் திருட்டு புகார் அளித்த நிகிதா இருந்த அறை உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.



  • Jul 15, 2025 16:34 IST

    கமராஜர் ஓவியம் வரைந்து கொண்டாட்டம்

    திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியத்தைச் சேர்ந்த கண்டகிரயம் அரசுப் பள்ளியில் காமராஜர் ஓவியத்தை வரைந்து அவரது பிறந்தநாளை மாணவர்கள், ஆசிரியர்கள் கொண்டாடினர்.



  • Jul 15, 2025 16:17 IST

    அஜித்குமார் வழக்கு - புதிய வீடியோ

    திருப்புவனம் இளைஞர் அஜீத்குமார் கொலை வழக்கு தொடர்பான புதிய வீடியோ வெளியானது. மண்டபத்தில் வைத்து அஜீத்குமாரின் குடும்பத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படும் வீடியோ வெளியானது. பேச்சுவார்த்தை நடத்தியதை படம் பிடித்தவர்கள் மீது போலீஸ் தாக்குதல் நடத்தியதாகப் புகார் எழுந்துள்ளது.



  • Jul 15, 2025 15:40 IST

    நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளுக்கு 5 நாட்கள் ஆரஞ்சு அலர்ட் - வானிலை மையம்

    நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளுக்கு 5 நாட்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 17 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்பு என சென்னை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 



  • Jul 15, 2025 15:00 IST

    கோயில் சொத்துகள் மீட்கப்பட வேண்டும் – ஐகோர்ட் கிளை

    அறநிலையத்துறை விதிகள்படி கோயிலுக்கு சொந்தமான சொத்துகள் மீட்கப்பட வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளை தெரிவித்துள்ளது. ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து கோயில் சொத்துகள் மீட்கப்பட வேண்டும். கோயில் சொத்துகள் கோயில் நலனுக்காக பயன்படுத்தப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். புதுக்கோட்டையில் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்தால் அதனை அகற்ற நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது.



  • Jul 15, 2025 14:43 IST

    பழனியில் மாலிப்டினம் எடுக்கும் திட்டம் இல்லை: சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தகவல்

    பழனியில் மாலிப்டினம் எடுக்கும் திட்டம் இல்லை என சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார். மேலும் “மக்கள் விரும்பாத, எதிர்க்கும் திட்டத்தை திமுக அரசு நிறைவேற்றாது. அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் வராததுபோல மாலிப்டினம் திட்டமும் வராது எனவும் பழனி எம்.எல். ஏ. செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.



  • Jul 15, 2025 14:09 IST

    நெல்லை தொகுதி எம்.பி. தொடர்ந்த வழக்கை ஜூலை 24க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

    தனது வெற்றியை எதிர்த்து நயினார் நாகேந்திரன் ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ராபர்ட் ப்ரூஸ் மனு அளித்தார். நெல்லை தொகுதி எம்.பி.ராபர்ட் ப்ரூஸ் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் ஜூலை 24க்கு ஒத்திவைத்தது.



  • Jul 15, 2025 13:57 IST

    கோவை, தென்காசியில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

    கோவை, தென்காசி மேற்குத்தொடர்ச்சி மலை பகுதியில் மாலை 4 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது.



  • Jul 15, 2025 11:50 IST

    திருவள்ளூர் ரயில் கவிழ்ந்து தீ விபத்து- விசாரணையை தொடங்கியது ரயில்வே

    திருவள்ளூர் டீசல் டேங்கர் ரயில் கவிழ்ந்து தீ விபத்து-  விசாரணையை தொடங்கியது ரயில்வே. லோகோ பைலட், உதவி லோகோ பைலட், ஸ்டேஷன் மாஸ்டர் உட்பட 16 பேரிடம் விசாரணை



  • Jul 15, 2025 11:46 IST

    அம்பேத்கர் சிலையை திறந்து வைத்த மு.க.ஸ்டாலின்

    Video: Sun News



  • Jul 15, 2025 11:24 IST

    சேலத்தில் இளைஞர் வெட்டி படுகொலை

    சேலத்தில் தூத்துக்குடியை சேர்ந்த மதன் (28) என்பவர் காவல்நிலையம் அருகே உள்ள உணவகத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.  காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு விட்டு வந்த‌வர் - 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.



  • Jul 15, 2025 09:27 IST

    கருணாநிதி சிலை மீது கருப்பு பெயிண்ட் ஊற்றிய மர்மநபர்கள்

    சேலத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலை மீது கருப்பு பெயிண்ட் வீசப்பட்டுள்ளது. உருவச்சிலையின் மார்பு மற்றும் கால் பகுதியில் கருப்பு பெயிண்ட் ஊற்றப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி கொண்டிருக்கிறார்கள். 



  • Jul 15, 2025 09:22 IST

    சங்ககிரி: நூற்பாலை வேன் தடுப்புச்சுவரில் மோதி விபத்து

    சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே நூற்பாலை வேன் சாலை நடுவே உள்ள தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. பச்சக்காடு என்ற இடத்தில் நடந்த விபத்தில் காயமடைந்த தொழிலாளர்கள் சங்ககிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



  • Jul 15, 2025 09:21 IST

    கும்மிடிப்பூண்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.1.05 லட்சம் பறிமுதல்

    கும்மிடிப்பூண்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.1.05 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • Jul 15, 2025 09:21 IST

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 17,845 கன அடியாக சரிவு

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 19,760 கன அடியில் இருந்து 17,845 கன அடியாக சரிந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.66 அடி; நீர் இருப்பு 92.93 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 18,500 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாய் வழியாக 500 கனஅடி நீர் வெளியேற்றம்.



Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: