Tamilnadu News Update : மதுரை பிபிகுளம் பகுதியில் தெருநாய் ஒன்று துண்டிக்கப்பட்ட குழந்தையின் தலையை வாயில் கவ்விக்கொண்டு சுற்றித்திரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை பிபிகுளம் பகுதியில் இந்தியன் வங்கிக்கு அருகில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்திற்கு எதிரே நாய் ஒன்று துண்டிக்கப்பட்ட குழந்தையின் தலையை வாயில் கவ்விக்கொண்டு சுற்றித்திரிந்துள்ளது. இதை கவனித்த அப்பகுதியைச் சேர்ந்த அய்யனார் என்பவர், இது குறித்து உடனடியாக உள்ளூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து தல்லாகுளம் போலீசார், உடனடியான சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.
அதற்குள் அப்பகுதியை சேர்த்த சிலர் நாயை விரட்டிவிட்டு தலையை மீட்டதாக தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த தலையை கைப்பற்றிய போலீசார் உடனாயடிகா, ராஜாஜி அரசு மருத்துவமனையில் உள்ள தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளதாகவும், இந்த குழந்தையின் உடல் பாகத்தை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறிய போலீசார் குழந்தையின் தலையில் அழுக்கு இருந்தது. எனவே இது ஏதேனும் கால்வாயில் வீசப்பட்டதா அல்லது குப்பை கிடங்கில் வீசப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக கூறியுள்ளனர்.
குழந்தையின் பாலினத்தை அடையாளம் காண தடயவியல் நடைமுறைகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம் என்றும் சம்பவம் நடந்த பகுதியில், கர்ப்பமாக இருந்த பெண்களின் பட்டியலையும், அண்மைக் காலத்தில் ஊருக்குச் சென்ற பெண்களின் பட்டியலையும் நாங்கள் சேகரித்து வருகிறோம்ஏன்றும், அரசு மருத்துவமனைகளில் பிரசவித்த பெண்களின் பட்டியல்களும் சேகரிக்கப்பட்டுள்ளன, ”என்று போலீஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நாய் எந்தப் பகுதியில் இருந்து வந்தது என்பதை நாங்கள் சரிபார்க்க வேண்டும். நாய் குழந்தையை எங்கு கண்டுபிடித்தது என்பதை அறிய அருகிலுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வருகிறோம், ”என்றும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
பட்டபகலில் குழந்தையில் வெட்டப்பட்ட தலையுடன் நாய் சாலையில் சுற்றித்திரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil