திருச்சி வரும் புஸ்ஸி ஆனந்திற்கு எதிர்ப்பு : விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் அதிரடி

Tamil News : திருச்சி வரும் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக மக்கள் இயக்க நீர்வாகிககள் கூறியுள்ளனர்.

Actor Vijay Makkal Iyakkam Update : விஜய் மக்கள் இயக்கத்தின் மூத்த நிர்வாகிகள் புறக்கணிக்கப்படுவதாகவும், திருச்சி வரும் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், திருச்சி மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

திருச்சியில் செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கூறுகையில்,

திருச்சி மாவட்டத்தில் பல ஆண்டுகளாக விஜய்யின் மக்கள் இயக்கத்தில் நிர்வாகிகளாகவும், கிளை மற்றும் ஒன்றிய நிர்வாகிகளாக செயல்பட்டு வந்த்தாகவும்,  மாநில பொறுப்பாளராகிய புஸ்ஸி ஆனந்த் கடந்த ஜூன் மாதம் திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர் ஆர்.கே. ராஜாவை இயக்கத்திலிருந்து நீக்கியதாகவும், அன்றிலிருந்து திருச்சி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து ஒன்றிய நகர தலைமை நிர்வாகிகள் அனைவரையும் புஸ்ஸி ஆனந்த் புறக்கணித்து வருவதாக கூறியுள்ளனர்.

தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் புதிய பதவிகள் அறிவிக்கப்பட்டபோதும் தங்களுக்கு எந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை என்றும், இது குறித்து நாங்கள் குழுவாக்கும் தனியாகவும் தலைமைக்கு தகவல் தெரிவிக்க முயற்சித்தும் எவ்வித பயனும் இல்லை என்றும் கூறிய நிர்வாகிகள், திருச்சி மாவட்டத்தில் விஜயின் பெயரில் எவ்வித நலத்திட்ட உதவிகளும் செய்யக்கூடாது என்று தங்களை மிரட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.  

திருச்சியில் வரும் வாரம் விழா நடைபெறுவதாக கேள்விப்பட்டோம். இந்த விழாவிற்கு மாநில பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் வருவதாக தகவல் கிடைத்துள்ளது. அவர் வரும்போது எங்கள் எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவிக்க உள்ளோம். தொடக்கத்தில் இருந்து விஜய் ரசிகனாக நற்பணி ஆற்றி வரும் எங்களை புறக்கணித்துவிட்டு, சமீபத்தில் இயக்கத்தில் சேர்ந்த சிலருக்கு பதவிகள் கொடுக்கப்பட்டதாக கூறியுள்ளனர். திருச்சியில் மட்டுமல்ல, அனைத்து மாவட்டங்களிலும் முக்கியமான மூத்த நிர்வாகிகள் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil actor vijay fans press meet against makkal iyakkam general secretary

Next Story
மாநிலங்களவை தேர்தல் : திமுக வேட்பாளராக எம்.எம்.அப்துல்லா அறிவிப்பு
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com