/indian-express-tamil/media/media_files/9LcWvHgSJmLlssfHOnww.jpg)
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் பட்டாளம் வைத்துள்ள நடிகர்களின் முக்கியமானவர் தளபதி விஜய். கடைசியாக லியோ படத்தில் நடித்திருந்த இவர். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே கடந்த சில ஆண்டுகளாக அரசியல் கட்சி தொடங்குவததற்கான முன்னேற்பாடுகளை செய்து வந்த விஜய்,அவ்வப்போது தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வந்தார்.
இந்நிலையில்,நடிகர் விஜய் இன்று தனது புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். தமிழக வெற்றி கழகம் என்று பெயரிட்டுள்ள இந்த கட்சியை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதற்காக விண்ணப்பித்துள்ளார். இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி விஜய் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விஜய் தொடங்கியுள்ள அரசியல் கட்சியில் அவரது பெயரும் இடம் பெற்றுள்ளது என்பது பலருக்கும் தெரியாத ஒரு தகவலாக உள்ளது.
விஜய புதிதாக தொடங்கியுள்ள கட்சியின் பெயர் ‘’தமிழக வெற்றி கழகம்’’ இதை தமிழில் த.வெ.க என்று சொல்லலாம். இதை ஆங்கிலத்தில் சொல்ல வேண்டும் என்றால் டி.வி.கே என்று சொல்வார்கள். அதன்படி பார்த்தால் டி தளபதி, வி – விஜய், கே – கட்சி என்று சொல்லலாம் தளபதி விஜய் கட்சி என்று வருகிறது. ஏற்கனவே புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் என்.ஆர்.காங்கரஸ் கட்சியில், என்.ரங்கசாமி என்ற பெயர் உள்ளது.
இந்த கட்சியின் பெயர், நமது ராஜ்ஜியம் காங்கிரஸ் இதன் சுருக்கமே என்.ஆர்,காங்கிரஸ். அதே போல் ஆந்திராவில் ஒய்.என்.ஆர் காங்கிரஸ் கட்சியில். ஒய்.என்.ஆர் என்பது ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி என்பதையும் குறிக்கும். இந்த கட்சியின் பெயர் யுவஜன ஸ்ரீரமிகா ரிது. இப்படி கட்சியின் தலைவர்கள் பெயர் கட்சியின் பெயரில் மறைமுகமாக இடம் பெற்றுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.