Actress Gayathri Raguram Replay To A.R.Rahaman : மத்திய உள்துறை அமைச்சர் அமி்த்ஷா, ஆங்கில மொழிக்கு மாற்றாக இந்தி மொழியை பயன்படுத்த வேண்டும் என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இவரின் கருத்துக்கு எதிரான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் மட்டுமல்லாமல், இந்தியாவின்பல மொழிகளில் இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான், 2 ஆஸ்கார் விருதுகளை வாங்கிய பெருமைக்குரியவர். இசைப்புயல் என்று அழைக்கப்படும் இவர், தமிழ் மொழியின் மீது தீராத பற்றுகொண்டவர். இதை வெளிப்படுத்தும் விதமாக பல தமிழ் ஆல்பங்களை வெளியிட்டள்ளார். மேலும் வெளிநாடுகளுக்கு சென்றாலும் கூட மேடை ஏறும்போது முதலில் தமிழுக்கு முக்கித்துவம் கொடுக்கும் வகையில் தமிழில் பேசுவார்.
தமிழ் மொழிக்கு ஒரு பிரச்சினை என்றால் முதலில் குரல் கொடுக்கும் நபராக உள்ள ஏ.ஆர்.ரஹ்மான், வட இந்தியாவில் நடைபெறும் விருதுவழங்கும் விழாவில் கூட தமிழில் பேசி அசத்தக்கூடியவர். இவரின் தமிழுக்காகவே உலகின் பல நாடுகளில் இவருக்கான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்தி திணிப்பு குறித்து அவ்வப்போது குரல் கொடுத்து வரும் ஏ.ஆர்.ரஹ்மான், தற்போது அமித்ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
‘திராவிடம்’ என்னும் முழக்கம் தமிழ் மொழி வளர்ச்சிக்கு தடை.
தமிழ் புகழ் ஓங்குக. pic.twitter.com/9aBJu5BZR4— Gayathri Raguramm 🇮🇳🚩 (@BJP_Gayathri_R) April 9, 2022
அதில், ழகரத்தை ஏந்தி நிற்கும் ஒரு புரட்சிப்பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள அவர், அதன் னீழு் இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு சேர் என்ற வரிகளை பதித்துள்ளார். இந்தியாவில் உள்துறை அமைச்சகத்தில் 70 சதவீதம் ஹிந்தி மொழியே பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், அனைத்து மாநில மக்களும் உரையாடுவதற்கு பொது மொழியாக ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்திய மொழி இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார்
அமித்ஷாவின் இந்த கருத்து தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவருக்கு பதில் தரும் விதமான ஏ.ஆர்.ரஹ்மானின் பதிவு வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில், ரஹ்மானின் பதிவுக்கு பதில் அளிக்கும் வகையில் நடிகை காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், தமிழில் வெளியான பாடல் வரிகளை குறிப்பிடடுள்ள அவர் ஏ.ஆர்.ரஹமான் இசையமைத்த பல பாடல் வரிகளை இணைத்துள்ளார்.
திராவிடக் கட்சிகள், இசை அமைப்பாளர் மற்றும் பாடலாசிரியர் தமிழில் இதுபோன்ற வார்த்தைகளைச் சேர்த்ததுதான் அவர்களின் சாதனை. -
முஸ்தபா முஸ்தபா don’t worry, வலுஹாபா வலுஹாபா Urvasi Urvasi, ஹே ஷபா ஹே ஷபா.. macho என்னா ஆச்சோ.. and more.. இதுதான் தமிழ் வளர்ச்சி? pic.twitter.com/e8V2978sze— Gayathri Raguramm 🇮🇳🚩 (@BJP_Gayathri_R) April 9, 2022
இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், திராவிடக் கட்சிகள், இசை அமைப்பாளர் மற்றும் பாடலாசிரியர் தமிழில் இதுபோன்ற வார்த்தைகளைச் சேர்த்ததுதான் அவர்களின் சாதனை. – முஸ்தபா முஸ்தபா don’t சாதனை. வலுஹாபா வலுஹாபா Urvasi Urvasi, ஹே ஷபா ஹே ஷபா.. macho என்னா ஆச்சோ.. and more.. இதுதான் தமிழ் வளர்ச்சி? முக்காலா முகபுல்லா, தில் ரூபா தில் ரூபா, hello doctor heart weak ache.. என்று பதிவிட்டுள்ளார்.
தெலுங்கச்சிக்கு தமிழின் புனிதத்தைப் பற்றி என்ன தெரியும் இதெல்லம் தமிழை பற்றிப்பேசுது.. pic.twitter.com/OmshmSOtXw
— திராவிடச்செல்வி (@DravidaSelvi12) April 9, 2022
'ஆரியம்' எனும் முழக்கம் இந்திய நாட்டின் வளர்ச்சிக்கே தடை..
தமிழ் புகழ் ஓங்குக..— Muniasamy Sakthivel 🖤❤️ (@Munis_DMK) April 9, 2022
அட மூதேவி திராவிடம் இல்லைன்னா
இந்நேரம் தமிழும் ,மலையாளம் கன்னடம்
போல மாறியிருக்கும்
சமக்கிருத சொற்களை ஒழித்து 95% தமிழ்
சொற்கள் இருக்க காரணமே திராவிடம் தான் .— ஆதிரன் ❤️ (@Aathiraj8586) April 9, 2022
"உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு இதை உரக்கச் சொல்வோம் உலகுக்கு"சின்ன சின்ன ஆசை", தமிழா தமிழா நாளை உன் நாளே", "கோடு போட்டா கொன்னு போடு வேலி போட்டா வெட்டி போடு,நேத்து வரைக்கும் உங்க சட்டம் இன்னைக்கிருந்து எங்க சட்டம்". இதுவும் நீங்க சொன்ன திராவிட இசையமைப்பாளர், கவிஞர் எழுதியதுதான்
— தோழர் மணிமாறன் (@manimaran3094) April 9, 2022
முட்டாள்...மாமி... மணி பிரவள நடை என்று ஒன்று இருந்தது தமிழை சமஸ்கிருதம் மாதிரி பேசுவது பாதி சமஸ்கிருதம் இப்போது அது மாதிரி ஒன்று இருந்ததற்கான அடையாளம் இல்லை திராவிட இயக்கங்களால் ஒழிக்கப்பட்டது இப்போதும் ஆவள் கள் பேசும் போது அதன் சாயல் தெரியும் சமஸ்கிருதம் தமிழை ஒழிக்க வந்த மொழி.
— Abdul Kareem (@abdulkareem5861) April 9, 2022
இந்தி கட்டாயம் ஆக்குன்னு சொல்ற , தமிழ் வளர்ச்சிக்கு தடைன்னு சொல்ற.. நீ என்ன பைத்தியமா ?
— Unity Bird (@mks_subbu1) April 9, 2022
இதுக்கும் அதுக்கும் என்ன சமந்தம்? pic.twitter.com/2ogczElFNV
— Vick craz (@vick_craz) April 9, 2022
மாமி உங்களை தான் அனைத்து விதமான பொறுப்புகளில் இருந்து பிஜேபி கட்சியில் இருந்து விடுவிட்டு விட்டார்கள் எதற்காக இவ்வளவு முட்டு குடுக்குறீர்கள்
— இம்சை அரசன் 🖤❤️ (@shah_one_men) April 9, 2022
இந்த பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில், காயத்ரி ரகுராம் ட்விட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.