/indian-express-tamil/media/media_files/J2K3EvvwnX1Kk3po4s7j.jpg)
நடிகை குஷ்பு
பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் சக்தியை குறைத்து மதிப்பிடாதீர்கள் என்று பாஜக பிரமுகரும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா, ராஜஸ்தான, மத்தியபிரதேசம், சத்திஸ்கர் மற்றும் மிசோரம் மாநிலங்களில் சமீபத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் மிசோரம் தவிர மற்ற 4 மாநிலங்களின் பதிவான வாக்குகள் எண்ணம் பணி இன்று காலை தொடங்கியது. இதில் தெலுங்கானா தவிர, மத்தியபிரதேசம், சத்திஸ்கர், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தது.
இதில் குறிப்பாக கடந்த முறை ராஜஸ்தானில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி தற்போது அங்கு கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில், தெலுங்கானாவில் சந்திரசேகரராவின் கட்சியிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியுள்ளது. அதே சமயம் மத்திய பிரதேசம், சத்திஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய 3 மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது.
இதற்காக பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷா, மற்றும் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், பாஜக பிரமுகரும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், 2 மனிதர்களின் சக்தியை இன்னும் உலகம் அதிகமாக பார்க்க வேண்டும்.
Never underestimate the power of these two men!! And their power is for the world to see!! PM @narendramodi ji and Shri @AmitShah ji.
— KhushbuSundar (@khushsundar) December 3, 2023
Their hard work, sleepless nights, understanding people's needs, 24/7 strategies guaranting 'sabka saath sabka vikas sabka viswaas', yields… pic.twitter.com/653UKds5sL
பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் கடின உழைப்பு, தூக்கமில்லாத இரவுகள், மக்களின் தேவைக்கு ஏற்ப திட்டங்களை செயல்படுத்துவது உள்ளிட்ட செயல்களின் மூலமாக வெற்றிகள் கிடைத்துள்ளது. இந்த வெற்றி 2024 மக்களவை தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று பதிவிட்டுள்ளார். குஷ்புவின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.