Advertisment

'சாகப் போறேன்; சீமான் தான் காரணம்': 'கடைசி வீடியோ' வெளியிட்ட விஜயலட்சுமி

பாலியல் வழக்கை தள்ளி வைத்துவிட்டு மானநஷ்ட வழக்கு போடுவேன் என்று வழக்கை திரை திருப்ப பார்க்கிறார்கள். இவர்களின் டார்ச்சர் தாங்க முடியவில்லை.

author-image
WebDesk
New Update
 Actress Vijayalakshmi on NTK seeman

சீமான் - விஜயலட்சுமி

இதுதான் எங்களது கடைசி வீடியோ இதுக்குமேல் நாங்கள் சாக போகிறோம் இதற்கு முழு காரணமும் சீமான் தான் என்று நடிகை விஜயலட்சுமி தற்போது வெளியிட்டுள்ள வீடியோ பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக சென்னை வளசரவாக்கம் காவல் நிலையில் புகார் அளித்த நடிகை விஜயலட்சுமி கடந்த சில தினங்களுக்கு முன் நள்ளிரவில் சீமான் மீதான தனது புகாரை வாபஸ் பெற்றிருந்தார். இந்த வழக்கில் சீமானை கைது செய்யாமல் விடப்போவதில்லை என்று கூறியிருந்த விஜயலட்சுமி வழக்கை வாபஸ் பெற்ற பின், தோல்வியை ஒப்புக்கொண்டு தான் இந்த புகாரை வாபஸ் பெற்றதாகவும்தான் மீண்டும் பெங்களூருவுக்கே திரும்ப சென்றுவிடுவதாகவும் கூறியிருந்தார். 

இதனிடையே பெங்களுருவுக்கு திரும்பி சென்ற நடிகை விஜயலட்சுமி, தொடர்ந்து வீடியோ பதிவுகளை வெளியிட்டு சீமான் மீதான தனது குற்றச்சாட்டை மீண்டும் தீவிரப்படுத்தி வருகிறார். இதனால் இந்த வழக்கு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது இதுதான் எங்களது கடைசி வீடியோ இனிமேல் நாங்கள் சாக போகிறோம் இதற்கு முழு காரணமும் சீமான் தான் என்று நடிகை விஜயலட்சுமி வெளியிட்டுள்ள விடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், இதுதான் எங்களது கடைசி வீடியோ எங்களது இந்த முடிவுக்கு சீமான் மட்டும் தான் காரணம். இதன் பிறகு நீங்கள் சீமானை கைது செய்து, என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். நானும் எங்க அக்காவும் சவால் விட்டுட்டு எங்களது அடுத்து பயணம் சாவை நோக்கி செல்கிறோம். இந்த வீடியோ மூலம் நான் உறுதிப்படுத்திக்கொள்கிறேன். நானும் சாக போகிறேன் எங்க அக்காவையும் கூடவே கூட்டிச்செல்ல போகிறேன்.

எங்களோட இந்த முடிவுக்கு சீமான் மட்டும் தான் காரணம். சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சியின் கொடுத்த டார்ச்சர், 2011-ல் நான் இந்த வழக்கை தொடங்கியபோது, இதேபோல் தான் என்னை அச்சுறுத்தி டார்ச்சர் செய்து துன்புறுத்தினார்கள். மேலும் இந்த வழக்கில் விசாரணை செய்ய விடாமல் தடுத்து, டார்ச்சர் செய்தார்கள். இப்போது 12 வருடங்கள கழித்தும் இதே நிலை தொடர்கிறது. இந்த பாலியல் வழக்கை தள்ளி வைத்துவிட்டு மானநஷ்ட வழக்கு போடுவேன் என்று வழக்கை திரை திருப்ப பார்க்கிறார்கள். இவர்களின் டார்ச்சர் தாங்க முடியவில்லை.

என்னை யாரும் வாழ விடமாட்டார்கள். எங்க அக்காவையும் வாழ விடமாட்டார்கள். நாங்கள் இந்த முடிவு எடுத்ததற்கு காரணம் சீமானும் நாம் தமிழர் கட்சியும் தான். குறிப்பாக சீமான் தான் முழு காரணம்.இந்த வழக்கில் எனக்கு மெண்டல் டார்ச்சர் கொடுத்து 4 பேருடன் குடும்பம் நடத்தியிருப்பதாக கூறி என்னை தமிழகத்தில் ரொம்ப கெட்ட பெயரை வாங்கி கொடுத்திருக்கிறார்கள். நாங்கள் இந்த மோசமாக முடிவு எடுப்பதற்கு காரணம் சீமானும் நாம் தமிழர் கட்சியும் தான்.

இதன் பிறகு சீமானை கைது செய்யுங்கள் அவரை தப்பிக்க விடாதீர்கள் நான் சாக வேண்டும் என்பது தான் சீமானின் டார்கெட். இதற்கு மேல் எந்த நம்பிக்கையும் இல்லை. 12 வருடங்களாக நான் டார்ச்சரை அனுபவித்து வருகிறேன். இதன் பிறகு நாங்கள் வாழ விரும்பவில்லை. இது தான் எனது கடைசி வீடியோ எல்லாருக்கும் நன்றி என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Seeman
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment