Advertisment

'வேறு யாரும் என்னைப் போல் சீமானை அசிங்கப்படுத்த முடியாது': முக்தார்- வீரலட்சுமி ஷாக் ஆடியோ

ஊடகவியலாளர் முக்தார், வீரலட்சுமியுடன் செல்போனில் பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

author-image
WebDesk
New Update
Seeman Mukthar veeralakshmi

முக்தார் - சீமான் - வீரலட்சுமி

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து நடிகை விஜயலட்சுமி பல அடுக்கடுக்கான புகார்களை கூறி வரும நிலையில், இது குறித்து ஊடகவியலாளர் முக்தாரும், தமிழர் முன்னேற்ற படை அமைப்பின் தலையுமான வீரலட்சுமி இருவரும் சீமானுக்கு எதிராக பேசிய வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ள நடிகை விஜயலட்சுமி, கடந்த சில வாரங்களாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து பல அடுக்கடுக்கான புகார்களை கூறி வருகிறார். இந்த புகார்கள் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில் விஜயலட்சுமிக்கு ஆதரவாக தமிழர் முன்னேற்ற படை அமைப்பின் தலைவர் வீரலட்சுமி செயல்பட்டு வருகிறார்.  

இந்நிலையில், ஊடகவியலாளர் முக்தார், வீரலட்சுமியுடன் செல்போனில் பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், விஜயலட்சுமிக்கு உதவி செய்ய நான் தயாராக இருக்கிறேன். என்னைப் போல் யாரும் சீமானை எதிர்த்து கேள்விக் கேட்கப் போவதில்லை. விஜயலட்சுமிக்கு உதவுவதால் தனக்கு எந்த ஆதாயமும் இ்லலை. நல்லெண்ண அடிப்படையில் ஊடகவியலாளர் என்ற முறையில் உதவி செய்ய விரும்புகிறேன்.

பெரிய ஊடகங்கள் எதுவும் சீமான் குறித்த செய்திகளை பெரிதுபடுத்துவதில்லை, அதனால் நான், விஜயலட்சுமியின் கருத்துகளை, குற்றச்சாட்டுகளை சமூக ஊடகம் வாயிலாக மக்களுக்கு கொண்டு செல்ல முடியும். அரசாங்கத்தில் நமக்கு ஆதரவு இருக்கிறது. நாம் தமிழர் கட்சியினர் தொடர்ந்து எனக்கு போன் செய்து நாகரிகமற்ற முறையில் பேசி வருகின்றனர்.

ஆனால் எனக்கு எந்த அச்சமும் இல்லை, அவர்களை எதிர்த்து நடிகை விஜயலட்சுமிக்கு உதவி செய்ய தயாராக இருக்கிறேன். இதுகுறித்து விஜயலட்சுமியிடம் பேசி, தனக்கு தெரியப்படுத்துங்கள் என்று முக்தார், வீரலட்சுமியிடன் கூறும் ஆடியோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Seeman
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment