AIADMK News In Tamil : அதிமுகவை எந்த ஒரு தனி நபரோ அல்லது தனி குடும்பமோ கைப்பற்ற முடியாது என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற முன்னாள் தற்காலிக பொதுக்செயலளர் வி.கே. சசிகலா அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில்,தற்போது அவர் மீண்டும் அரசியலுக்கு வர இருப்பதாகவும், விரைவில் மீண்டு வந்து கட்சியை காப்பாற்றுவேன் என்று அவர் பேசிய ஆடியோ பதிவு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது இதற்கு பதில் அளித்துள்ள ஒ.பன்னீர்செல்வம், ஒரு தனி நபரோ அல்லது தனி குடும்பமோ கைப்பற்ற முடியாது என்று கூறியுள்ளார்.
மேலும் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையிலான வாக்குப் பகிர்வு வேறுபாடு ஓரளவுதான் என்று வாதிட்ட அவர், திமுகவின் "தவறான" தேர்தல் வாக்குறுதிகளுக்கு அவர்கள் தான் காரணம் என்றும், அதிமுக வலுவாகவும் அப்படியே இருப்பதாகவும் கூறியுள்ள அவர், "எந்தவொரு தனிநபரும் கட்சியை அசைக்க முயற்சிக்க முடியாது என்றும் கட்சியின் அடித்தளம் மிகவும் வலுவானது மற்றும் மறைந்த தலைவர்களான எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரால் அமைக்கப்பட்டது, எடப்பாடி பழனிசாமி மற்றும் பிற மூத்த தலைவர்களின் <கூட்டு> தலைமையின் கீழ் கட்சி அப்படியே இருக்கும் என்று கூறியுள்ளார்.
பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி இருவரும் நேற்று (செவ்வாய் கிழமை) புதுதில்லியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்தனர். இதனைத் தொடர்ந்து தமிழகம் திரும்பிய அவர்கள், திமுக அரசாங்கத்தின் "தவறான தேர்தல் வாக்குறுதிகள்" கண்டித்து முன்பே அறிவிக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். இதனத் தொடர்ந்து போடினாயக்கனூரில் செய்தியாளர்களை சந்தித்த ஒ.பன்னீர்செல்வம் கூறுகையில்,,
ஜெயலலிதாவின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறப்பது குறித்து விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் எப்போது அழைத்தாலும் ஆஜராக தயார் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், திமுக அரசாங்கம் கோவிட் -19 நிர்வாகத்தில் தோல்வியுற்றது மற்றும் தேவையில்லாமல் மத்திய அரசையும், முந்தைய அதிமுக அரசாங்கத்தையும் தவறு செய்ததாக கூறுகிறது. "திமுக அதன் அறிக்கையில் வாக்குறுதியளித்தபடி எரிபொருள் விலையை குறைப்பதற்கு பதிலாக மத்திய அரசின் மீது பழியை போடுகிறது.
மேலும் தமிழகத்தின் அனுமதியின்றி கர்நாடகா மேதாதுவில் அணை கட்ட முடியாது என்று பிரதமரிடம் மீண்டும் வலியுறுத்திதாகவும், காவிரி சர்ச்சையை திமுக தவறாக கையாண்டதாக அவர் குற்றம் சாட்டினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil