எதிர்கட்சி தலைவர் போட்டி : இபிஎஸ் – ஒபிஎஸ் வைரல் மீம்ஸ்

EPS – OPS Memes : அதிமுகவில் எதிர்கட்சி தலைவர் யார் என்பது குறித்து இபிஎஸ் ஒபிஎஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற்ற 16-வது சட்டமன்ற தேர்தலில் ஹாட்ரிக் வெற்றியை நோக்கி களமிறங்கிய அதிமுக 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று படுதோல்வியை சந்தித்தது. இதனால் அதிமுகவில் பெரும் சலசலப்பு நிலவி வரும் நிலையில், சட்டமன்றத்தில் எதிர்கட்சியாக இருக்கும் அதிமுகவில் எதிர்கட்சி தலைவர் யார் என்பதில் ஒபிஎஸ் இபிஎஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில், நேற்று சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற இருந்தது. இந்த கூட்டத்திற்கு தொண்டர்கள் முதல் மூத்த தலைவர்கள் வரை அனைவரும் தயாராகி வந்த நிலையில், கூட்டம் தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அலுவலகத்தின் முன் வந்த தொண்டர்கள் கட்சிக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்று கூறி கோஷம் எழுப்ப தொடங்கினர். இதில் இபிஎஸ் மற்றும் ஒபிஎஸ் தொண்டர்கள் தங்களது தலைவருக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் வரும் 10-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் இன்றைய தினமே அதிமுக கொறடா மற்றும் எதிர்கட்சி தலைவர் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எதிர்கட்நி தலைவர் பதவிக்காக இபிஎஸ் மற்றும் ஒபிஎஸ் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளதை நெட்டிசன்கள் மீம்ஸ் மூலம் கலாய்த்து வருகின்றனர். அப்படி வெளியான மீம்களில் சில உங்களர் பார்வைக்கு…

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil aiadmk mla meet eps ops supports viral memes

Next Story
முதல்வர் ஸ்டாலினுடன் பிரதமர் தொலைபேசியில் உரையாடல்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com