தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில், ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் தமிழ் இலக்கியவியலுக்கு தனித்துறை துவங்க வைப்புநிதியாக 5 கோடி ரூபாய்க்கான காசோலையை பல்கலைக்கழக துணைவேந்தரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
தலைமை செயலகத்தில் முதலமைச்சரின் அறையில் நடைபெறக்கூடிய நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.
தமிழ்ச்செம்மல் விருதுகளை 38 தமிழ் அறிஞர்களுக்கும் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இதை தொடர்ந்து, மறைந்த 5 தமிழ் அறிஞர்களின் நூல்கள் உட்பட மொத்தம், 8 தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடைமை படுத்தி, நூலுரிமைத் தொகையை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
மேலும், தமிழ்ச்செம்மல் விருதுகளை 38 தமிழ் அறிஞர்களுக்கும், சிறந்த மொழி பெயர்பாளர்களுக்கான விருதுகளை 10 நபர்களுக்கும் முதலமைச்சர் வழங்கினார்.
தமிழ் மொழி வளர்ச்சி, சமூக முன்னேற்றத்துக்குப் பாடுபட்டதற்காக மறைந்த நெல்லை கண்ணன், விடுதலை ராஜேந்திரன், நெல்லை செ. திவான், நா. மம்மது, கந்தர்வன், சோமலே, விருதுநகர் ராசய்யா, தஞ்சை பிரகாஷ் ஆகியோரின் நூல்களை நாட்டுடைமைப் படுத்தி, ரூ.1 கோடி உரிமைத் தொகை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil