தமிழ் சினிமாவின் இயக்குனர் இமயம் என்று அழைக்கப்படுவபவர் பாரதிராஜா. தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாக பல படங்களை கொடுத்த பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 1987-ம் ஆண்டு வெளியான படம் வேதம் புதிது. ஜாதி ஒழிக்க வேண்டும் என்று நோக்கத்துடன் எடுக்கப்பட்ட இந்த படம் அன்றைய காலட்டத்தில் பெரிய வசூல் சாதனை நிகழ்த்தி பலரின் பாராட்டுக்களை பெற்றது.
அதேபோல் இந்த படத்தின் வெளியீடு சிக்கல் இருந்தபோது அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் படத்தின் வெளியீட்டுக்கு பெரிய உதவி செய்ததாகவும் தகவல்கள் உள்ளது. ஊர் பெரியவரான சத்யராஜா தனது மகன் இறந்துவிட்டாலும், அவர் காதலித்த பிராமண குடும்பத்து பெண்ணை தனது மகளாக ஏற்றுக்கொண்டு வாழந்து வரும்போது அவர் சந்திக்கும் பிரச்சனைகளை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது.
இந்த படத்தில் பாலு தேவர் என்ற கேரக்டரில் வரும் சத்யராஜ் ஒரு சிறுவனை தனது தோலில் தூக்கி சென்றுகொண்டிருப்பார். அப்போது பாலு உங்க பெயர் தேவர் என்பது நீங்கள் படித்து வாங்கிய பட்டமா என்று சத்யராஜூ வை பார்த்து சிறுவன் கேட்பார். இந்த காட்சி இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இந்த சிறுவன் வளர்ந்து இப்போது முன்னணி டப்பிங் கலைஞராகவும், சீரியல் நடிகராகவும் உள்ளர்.

அவர் பெயர் தசரதி. தற்போது விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் தசரதி மகாபாராதம் சீரியலில் கிருஷ்ணருக்கு டப்பிங் குரல் கொடுத்து அசத்தியுள்ளார். இவரது குரல் தமிழகத்தின் பல வீடுகளில் இன்றளவும் ஒளித்துக்கொண்டிருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல், ஷங்கர் இயக்கிய முதல் படமான ஜென்டில்மேன் படத்திலும் தசரதி முக்கிய கேரக்டர் ஒன்றில் நடித்துள்ளார்.
அர்ஜூன் நாயகனாக நடித்த இந்த படத்தில், க்ளைமேகஸில் அர்ஜூன் குற்றவாளி என்று கூறி நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கும்போது கிச்சாவை விடுதலை செய் என்று கோஷம் எழுப்பும் இளைஞாக வரும் தசரதி, இறுதியில் சைக்கிள் மனித வெடிகுண்டாக மாறி அமைச்சரின் காரில் சைக்கிள் மோதி இறந்துவிடுவார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil