Tamil Cinema Actor Rajinikanth Health Update : ரஜினிகாந்த் மூளைக்கு இரத்தம் சப்ளை செய்யும் செயல்பாட்டை சரி செய்யும் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார் என்று அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
Advertisment
தமிழ சினிமாவின் முன்னிணி நடிகரான ரஜினிகாந்த தற்போது அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ளார். சிறுத்தை சிவா இயக்கியுள்ள இந்த படத்தில் நயன்தாரா குஷ்பு, கீர்த்தி சுரேஷ், மீனா, பிரகாஷ்ராஜ், ஜெகபதி பாபு, சூரி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படம் வரும் தீபாவளி தினத்தை முன்னிட்டு நவம்பர் 4-ந் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது பேரன்களுடன் நேற்று முன்தினம் அண்ணாத்த படத்தை பார்த்துள்ளார். இந்த படத்தை பார்த்து தனது பேரன் மகிழ்ச்சியில் தன்னை கட்டிப்பிடித்ததாக கூறியிருந்தார். இதனால் அண்ணாத்த படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கும் நிலையில், நேற்று மாலை திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அவரது உடல்நலம் குறித்து காவேரி மருத்துவனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
Advertisment
Advertisements
இதில் திடீர் உடலநலக்குறைவு காரணமாக நேற்று காவேரி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்துக்கு மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டனர். இந்த பரிசோதனையின் முடிவில் அவருக்கு கரோடிட் தமனி மறுசுழற்சி சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது அதன்படி இன்று சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொளளப்பட்டது.
சிகிச்சைக்கு பின் ரஜினிகாந்த் நலமுடன் இருக்கிறார். அவர் விரைவில் குணமடைந்து வருகிறார். இன்னும் சில நாட்களில் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, ரஜினிகாந்த் மூளைக்கு இரத்தம் சப்ளை செய்யும் செயல்பாட்டை சரி செய்யும் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். மேலும், ரஜினிகாந்த் விரைவாக குணமடைந்து வருவதாக அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கடந்த அக்டோபர் 28ம் தேதி மயக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று மருத்துவமனை தெரிவித்தது. ரஜினிகாந்த், மருத்துவ நிபுணர்கள் குழுவினரால் முழுமையாக பரிசோதனை செய்யப்பட்டார். அவர்கள், அவருக்கு கார்டாய்டு ஆர்டரி ரிவாஸ்குலரைசேஷன் செய்ய அறிவுறுத்தப்பட்டது என்று காவேரி மருத்துவமனை ( மூளைக்கு ரத்த விநியோகத்தை சரி செய்யும் சிகிச்சை) வெளியிட்டுள்ள மருத்துவ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ரஜினிக்கு இந்த அறுவை சிகிச்சை இன்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு அவர் நலமுடன் உள்ளார். சில நாட்களுக்குப் பிறகு அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனையின் இணை நிறுவனரும் செயல் இயக்குநருமான டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil