scorecardresearch

காரில் இருந்த வினோத பாம்பு : லாவகமாக பிடித்து வனத்துறையிடம் ஒப்படைப்பு

காரில் பயணம் செய்தவர்கள் ஆனைகட்டி பகுதிக்கு சென்று வந்துள்ளனர். அப்போது மரத்தின் மீது இருந்த பாம்பு இந்த காரில் ஏறி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

காரில் இருந்த வினோத பாம்பு : லாவகமாக பிடித்து வனத்துறையிடம் ஒப்படைப்பு

கோவையில் காரினுள் இருந்த  விநோத பறக்கும் பாம்பு பிடிக்கப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் கார் பழுது செய்யும் நிறுவனத்திற்கு ஆனைகட்டி பகுதியில் இருந்து  ஒருவர் கார் ஓட்டி வந்துள்ளனர். அப்போது அந்த காரின் உள்ளே பாம்பு இருப்பதை கண்ட ஊழியர்கள் உடனடியாக பாம்பு பிடிக்கும் நபரான ரபிஸ் என்பவரை அழைத்துள்ளனர். 

இதனைத் தொடர்ந்து உடனடியாக அங்கு வந்த ரபிஸ், காரில் இருந்த பாம்பை ரபிஸ் லாவகமாக பிடித்தார். தொடர்ந்து பாம்பை பரிசோதனை செய்ததில் இது ஒரு விநோத வகையான பறக்கும் பாம்பு என தெரிந்தது. மேலும் இந்த வகையான பாம்புகள் மலை மேல் இருக்கும் மரங்களில் மட்டுமே இருக்கும் எனவும் தெரியவந்தது.

காரில் பயணம் செய்தவர்கள் ஆனைகட்டி பகுதிக்கு சென்று வந்துள்ளனர். அப்போது மரத்தின் மீது இருந்த பாம்பு இந்த காரில் ஏறி உள்ளதாக தெரிவித்துள்ளனர். பிடிபட்ட பாம்பை உடனடியாக வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு மீண்டும் அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamil coimbatore a strange snake in care shocking update