/tamil-ie/media/media_files/uploads/2022/03/Gowthaman.jpg)
Director Gowthaman Arrested In Tuticorin Airport : தென்காசி மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தூத்தக்குடி விமான நிலையத்தில் வந்திறங்கிய திரைப்பட இயக்குனரும், தமிழ் பேரரசு கட்சியில் பொதுச்செயலாளருமான வ.கௌதமன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
தென்காசி மாவட்டத்தில், குறிஞ்சாக்குளம் காந்தாரியம்மன் கோவில் வழிபாட்டு உரிமை போராட்டத்தில், உயிரிழந்த 4 பேருக்கு நடுக்கல் வழிவாடு செய்யவும், அங்கு காந்தாரியம்மன் சிலை அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்ற இயக்குநரும் தமிழ் பேரரசு கட்சியின் பொதுச்செயலாளருமான வ.கௌதமனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அழைப்பை ஏற்று விழாவில’ பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்த வ.கௌதமனை தூத்துக்குடி போலீசார் விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர். இந்த நிகழ்ச்சியில் அவர் பங்கேற்ற கூடாது என்று கூறி அவரை கைது செய்யதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்போது குறிஞ்சாக்குளத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால். சட்டம் ஒழுங்கு பாதிப்பப்படும் என்பதால் தடை உத்தரவையும் மீறி கௌதமன் உட்பட 13 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது கைது செய்யப்பட்டவர்கள் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தன்னை கைது செய்தது குறித்து பேசியுள்ள வ.கெளதமன், காந்தாரியம்மன் சிலையை நிறுவி தமிழக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், எங்கள் உரிமைக்காக ஜல்லிக்கட்டு போராட்டத்தை காட்டிலும் பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம் என்று கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.