Tamil News Update For Director Vasantha balan அனைத்து கடைகளிலும் விற்பனையாளர்களுக்கு இருக்கை வசதிகளை வழங்க வேண்டும் என்று கடந்த திங்கள் கிழமை (செப்-6) தமிழக அரசு கட்டசபையில் மசோதா ஒன்றை நிறைவெற்றியது. இந்த மசோதா குறித்து சமூக வலைதளங்களில் அதிக பாராட்டுக்கள் கிடைத்தாலும், இந்த நடவடிக்கை நீண்ட காலதாமதமானது என்ற கருத்தும் நிலவி வருகிறது. ‘அங்காடி தெரு’ என்றதிரைப்படம் வருவதற்கு முன்னாள் இது பற்றி யாரும் பேசியதுகூட இல்லை. ஆனால் இந்த படம் வெளியாகி இந்தப் பிரச்சினையை வெளிச்சம் போட்டுக் காட்டியதை பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடந்த 2010-ம் ஆண்டு மகேஷ், அஞ்சலி, பழ.கருப்பையா, வெங்கடேஷ் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் அங்காடி தெரு. கடைகள் மற்றும் நிறுவனங்களில் குறைவான சம்பளத்திற்கு அதிக நேரம் வேலை செய்யும் தொழிலாளர்களின் வாழ்கையை பிரதிபலிக்கும் இந்த படத்தில், மாநிலத்தில் தொலைதூர கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பெரிய மற்றும் சில்லறை நிறுவனங்களின் முகவர்களால் ஒப்பந்தத்தில் வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள். குடும்பத்தின் வறுமை காரணமாக ஆண்களும் பெண்களும் குறைந்த சம்பளத்தில் நீண்ட நேரம் வேலை செய்வதாக திரைக்கதை அமைக்கப்பட்டிருந்த்து.
ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற அங்காடி தேரு பல சர்வதேச திரைப்பட விழாக்களில் ஏராளமான விருதுகளைப் பெற்றது. இந்நிலையில், அனைத்து கடைகளிலும் விற்பனையாளர்களுக்கு இருக்கை வசதிகளை வழங்க வேண்டும் எனற தமிழக அரசின் இந்த திட்டத்தை அங்காடித்தெரு படத்தில் இயக்குநது வசந்தபாலன் வரவேற்றுள்ளார்.
இது தொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய அவர் கூறுகையில்,
தமிழக அரசின் இந்த திட்டத்தை வரவேற்கிறேன். ஆனால் அடிப்படை மனித உரிமையை உறுதி செய்ய ஒரு சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். ஒரு தொழிலாளிக்கு கழிவறை வழங்க ஒரு சட்டத்தின் அவசியம் பற்றி நான் யோசித்துக்கொண்டிருந்தேன். எங்கள் வீட்டிற்கு யாராவது வருகை தந்தால், அவர்களை உட்காரச் சொல்வது, ஒரு கிளாஸ் தண்ணீர் கொடுப்பது அல்லது ஏதாவது சாப்பிட வேண்டுமா என்று விசாரிப்பது அடிப்படை மனித மரியாதை, ” "இந்த கலாச்சாரத்தை பாதுகாக்க கூட அரசாங்கம் தலையிட வேண்டிய சூழ்நிலையில் நாம் இப்போது இருக்கிறோம். இது மிகவும் வருத்தமளிக்கிறது. மறுபுறம், இந்த நுண்ணிய அளவிலான பிரச்சினைகளை அரசாங்கம் உன்னிப்பாக கவனித்து அவற்றை நிவர்த்தி செய்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், ”என்று வசந்தபாலன் கூறியுள்ளார்.
மேலும் கடை உரிமையாளர்களுக்கு ஊழியர்களை மரியாதையுடன் நடத்தவும், அவர்களுக்கு சரியான சம்பளத்தை வழங்கவும், எட்டு மணி நேரம் மட்டுமே வேலை செய்யச் செய்யவும், அவர்களின் இரத்தத்தை உறிஞ்சவும் கூடாது என்ற அரசாங்க உத்தரவை இது பிரதிபலிக்கிறது, என்று கூறிய அவர், இந்த கடைகள் மற்றும் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு இருக்கை ஏற்பாடுகளைச் செய்கிறதா என்று சோதிக்க அவர்கள் ஒவ்வொரு நாளும் ஒரு அதிகாரியை நியமிக்க முடியாது. நம் நாட்டில் எல்லாவற்றிற்கும் சட்டங்கள் உள்ளன, ஆனால் அவை எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்பது பற்றியது அதிகளவில் தெரிவதில்லை.
முன்னேறிய சமூகம் என்று அழைக்கப்படுபவர்கள் இந்த தொழிலாளர்களும் சக மனிதர்கள் என்பதை உணர வேண்டும். ஜவுளி மற்றும் தங்க ஷோரூம்களில் உள்ள ஊழியர்கள் எட்டு மணி நேரமும் அமர மாட்டார்கள். வாடிக்கையாளர்களுக்கு ஒரு புடவை அல்லது தயாரிப்பை காட்சிப்படுத்த அவர்கள் எழுந்து நிற்க வேண்டும். தமிழ்நாடு கடைகள் மற்றும் ஸ்தாபனங்கள் சட்டம், 1947 ன் பிரிவு 22 க்குப் பிறகு திருத்தம் சேர்க்கப்படும் என்று தொழிலாளர் துறை அமைச்சர் சி.வி.கணேசன் கூறியிருந்தார். ஒவ்வொரு நிறுவன வளாகத்திலும் அனைத்து ஊழியர்களுக்கும் ஏற்ற இருக்கை ஏற்பாடுகள் இருக்க வேண்டும். உட்காரும் எந்தவொரு வாய்ப்பையும் தங்கள் வேலையின் போது ஏற்படலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil