DMK Dr.Mahendaran Krishna Jayanthi Wishes : தந்தை பெரியார் படத்துடன் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள் கூறிய திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளர் டாக்டர் ஆர். மகேந்திரனுக்கு கட்சியினரிடம் இருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டு நடிகர் கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியில் துணைத்தலைவராக இருந்தவர் டாக்டர் ஆர்.மகேந்திரன். கோவை மாட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த இவர், கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு கனிசமான வாக்குகள் பெற்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். தொடர்ந்து சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் கோவை சிங்கா நல்லூர் தொகுதியில் போட்டியிட்டார்.
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியை தவறவிட்ட இவர் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் இந்த மகேந்திரன் தோல்வியடைந்தார். மேலும் கட்சி சார்பில் போட்டியிட்ட அனைவரும் தோல்வியை தழுவிய நிலையில், தோல்விக்கு காரணம் கமல்ஹாசனின் தவறான அனுமுறைதான் என்று வெளிப்படையாக விமர்சித்தார். இதனால் இருவருக்குள்ளும் மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து மகேந்திரன் அக்கட்சியில் இருந்து விலகினார்.
இதனத் தொடர்ந்து சில மாத இடைவெளிக்கு பிறகு திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் டாக்டர் மகேந்திரன் தனது ஆதரவாளர்கள் சிலருடன் திமுகவில் இணைந்தார். தற்போது திமுகவில் தகவல் தொழில்நுட்ப அணியின் இணைச் செயலாளராக உள்ள அவர், கடந்த ஆகஸ்ட் 30-அன்று இந்தியாவில் கொண்டாடப்பட்ட கிருஷ்ண ஜெயந்தி விழாவுக்கு பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் படத்துடன் வாழத்துக்கள் கூறியுள்ளது திமுகவினரிடையே சற்று அதிர்ச்சியை ஏற்படுதுதியுள்ளது.
புராண கதை பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லாத திமுகவில் தற்போது டாக்டர் மகேந்திரனின் இந்த செயல் திமுகவினரிடையே பெரும் விவாதபொருளாக மாறியுள்ளது. புராண கதைகள் அடிப்படையிலான பண்டிகைகளுக்கு வாழ்த்துகள் வாழ்த்து சொல்வதை காலம் காலமாக தவிர்த்து வரும் திமுகவில், தற்போது பெரும் சலசப்பு ஏற்பட்டுள்ள நிலையில், வருவோர் போவோர் எல்லோரையும் திமுகவில் சேர்த்தால் இப்படி நடக்கும் என்று சில முன்னணி தலைவர்கள் கூறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil