மனைவி மரணம்; பிரிவின் துயரில் ஆ.ராசா : மனதை உலுக்கிய ஒற்றை புகைப்படம்!
மனைவி இழப்பை தாங்க முடியாமல் ராசா வருத்தமடைந்துள்ளார். தனக்கு எல்லா சமயத்திலும் உடனிருந்த மனைவியின் பிரிவு அவர் மனதை வெகுவாக பாதித்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மனைவி இழப்பை தாங்க முடியாமல் ராசா வருத்தமடைந்துள்ளார். தனக்கு எல்லா சமயத்திலும் உடனிருந்த மனைவியின் பிரிவு அவர் மனதை வெகுவாக பாதித்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Tamil DMK MP A.Rasa Wife Passed Away Stand Single In front of her Memorial News Tamil : திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா வின் மனைவி பரமேஸ்வரி, கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் அவதியுற்று வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் உயிரிழந்தார். தமிழக சட்டமன்றத் தேர்தல் பரப்புரைக்காக ஆ.ராசா தமிழகம் முழுவதும் பயணம் செய்தார். அப்போது, அவரது மனைவி பரமேஸ்வரி புற்றுநோய் பாதிப்பால் அவதியுற்று மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். தேர்தல் பரப்புரைகள் நிறைவடைந்ததும், சிகிச்சைப் பெற்று வந்த மனைவிக்கு துணையாக இருந்து வந்தார் ராசா.
Advertisment
மருத்துவ சிகிச்சைகள் பலனளிக்காமல் செல்ல, பரமேஸ்வரி சென்னை ரேலா மருத்துவமனையில் வெண்டிலேட்டர் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டார். சில நாள்களில் உடல்நிலை மோசமடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. சிகிச்சை பலனளிக்காமல் கடந்த சில தினங்களுக்கு முன்பு பரமேஸ்வரி உயிரிழந்தார். அவரின் உடல் சொந்த ஊரான பெரம்பலூரை அடுத்த வேலூர் கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதி சடங்கில், தி.மு.க., - எம்.எல்.ஏ., உதயநிதி, பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் நேரு, பொன்முடி, பன்னீர்செல்வம், ராமச்சந்திரன், ரகுபதி, மகேஷ், கணேசன், சிவசங்கர், மூர்த்தி, திருச்சி டி.ஐ.ஜி., ஆனி விஜயா, பெரம்பலுார் கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா, எஸ்.பி., நிஷா பார்த்திபன் உட்பட பலர் கலந்துக் கொண்டு ராசாவுக்கு பக்க பலமாக இருந்தனர்.
பரமேஸ்வரியின் மறைவை அடுத்து, திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘ஆ.ராசா அவர்களின் வாழ்விணையர் திருமதி. பரமேஸ்வரி மரணமடைந்த செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. திராவிடத் தத்துவத்தினை அரசியல் பாடமாகப் பயின்று பொதுவாழ்வில் ஈடுபட்ட ஆ.ராசாவின் உயர்விலும் – தாழ்விலும், நெருக்கடிகளிலும் – சோதனைகளிலும் தோன்றாத் துணையாக உடனிருந்து அவரது வெற்றிக்குப் பக்கபலமாக இருந்தவர் அம்மையார் பரமேஸ்வரி. அவரது மறைவு ஏற்படுத்தும் பெருந்துயரால் வேதனையில் வாடும் ஆ.ராசாவின் கரங்களைப் பற்றி ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
திருமதி.பரமேஸ்வரியின் பிரிவால் வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆ.ராசா இந்தத் துயரில் இருந்து மீண்டெழ, உடன்பிறப்பு என்ற சொல்லுக்கேற்ப கழகம் தோள் கொடுத்துத் துணை நிற்கும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Advertisment
Advertisements
இந்த நிலையில், மனைவி இழப்பை தாங்க முடியாமல் ராசா வருத்தமடைந்துள்ளார். தனக்கு எல்லா சமயத்திலும் உடனிருந்த மனைவியின் பிரிவு அவர் மனதை வெகுவாக பாதித்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், மனைவி அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தனி ஆளாய் நின்று மரியாதை செலுத்திவிட்டு, நினைவலைகளை ராசா நினைத்து பார்ப்பதை போல புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. அந்த புகைப்படம் ராசாவின் தற்போதைய மனநிலையை நமக்கு உணர்த்துவதாக உள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil