தமிழகத்தில் வரும் மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமடைந்து வருகிறது. இதில் அதிமுக –வை நிராகரிப்போம் என்ற பெயரில், திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக பல கிராமங்களில் கிராம சபை கூட்டங்களை நடத்தி மக்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார்.
அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே அம்மையார்குப்பம் கிராமத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கிராமசபை கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட முருக பக்தர்கள் முருக கடவுளுக்கு உகந்த வெள்ளி வேல் ஒன்றை ஸ்டாலினுக்கு பரிசளித்தனர். இது குறித்து புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பொதுவாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இந்து கடவுளை பொருட்படுத்தாது என்று பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், முருக கடவுளின் வேல் ஸ்டாலினுக்கு பரிசளிக்கப்பட்டது தமிழக அரசியலில் பெரும் பரபரப்ப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த செயலுக்கு திமுகவினர் ஒருபுறம் ஆதரவு தெரிவித்தாலும், பாஜக தரப்பில் கடும் விமர்சனம் வெளிவந்த வண்ணம் உள்ளது. மேலும் பாஜக சார்பில் கடந்த நவம்பர் மாதம் நடத்தப்பட்ட வேல் யாத்திரைக்கு திமுக எதிர்ப்பு தெரிவித்தது.
ஆனால் தற்போது திமுக தலைவரே வேல் யாத்திரைக்கு புறப்பட்டுவிட்டார் என சமூக வலைளதங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. ஆனால் இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய ஸ்டாலின், நானும் திமுகவும் இந்துக்களுக்கு எதிரானவர்கள் இல்லை என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த வேல் விவகாரத்திற்கு பாஜக பிரமுகர்கள் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகள்
இது குறித்து தமிழக முதல்வர் பழனிச்சாமி கூறுகையில், கடவுளை இழிவாக பேசியவர் கையில், கடவுள் வேல் கொடுத்து இருக்கிறார்கள் என்றார். முருகனின் வரம், அதிமுகவிற்குதான் என்றும் தெரிவித்துள்ளார். அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ, ஸ்டாலின் தேர்தலை முன்னிட்டு தீ மிதப்பார் ஆனால் தேர்தல் முடிந்த பிறகு பகுத்தறிவு பேசுவார். வரும் தேர்தலில் மீண்டும் அதிமுக ஆட்சியை பிடிக்கும், எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராவார் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் வேல் யாத்திரையை விமர்சித்தவர்களே, கையில் வேலை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்!" என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், ஸ்டாலின் மீது விமர்சனம் வைத்துள்ளார். ஆனால் திமுக பொது செயலாளர் துரைமுருகன், "ஸ்டாலின் வேல் எடுத்தது சூரசம்ஹாரத்திற்குதான் என்று தெரிவித்துள்ளார்.
இதில் சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பூ தனது ட்விட்டர் பதிவில், இரு தலைவர்கள் தங்களது தகுதியை நிரூபிக்க தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். இதில் பரிதாபம் என்னவென்றால், ஸ்டாலின் தோல்வியடைந்தார். கடவுள் முருகன் மீதான அன்பை திடீரென அறிவித்துள்ளார். ராகுல் காந்தி தமிழகத்தில் அன்பை பொழிகிறார். அவர்கள் வசதிக்காக கூட்டணியில் ஒட்டிக்கொள்வதில் ஆச்சியமில்லை என பதிவிட்டுள்ளார்.
Two leaders desperately trying to prove their worth but failing miserably. @mkstalin declaring his sudden love for #LordMurugan n @RahulGandhi his love for #TN is doing nothing but making mockery of themselves. No wonder they stick to an alliance of convenience. #DMKCongFails
— KhushbuSundar ❤️ (@khushsundar) January 24, 2021
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.